சென்னை: ஏர்ஏசியா நிறுவனம் இந்தியாவில் நீண்ட காலமாக உள்நாட்டு விமானச் சேவையினை அளித்து வந்தாலும் சென்னை விமான நிலையத்தில் இருந்து இந்திய நகரங்களுக்கு விமானச் சேவையினை இரண்டு வருடங்களுக்கு முன்பு நிறுத்தியது.
தற்போது உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவையில் மேலும் வழித்தடங்களை அதிகரிக்கும் எண்ணத்தில் ஏர்ஏசியா நிறுவனம் உள்ளது.
வழித்தடங்கள்
புதிய வழித்தடங்களைத் தங்களது விமானச் சேவையில் சேர்ப்பதற்காக ஏர்ஏசியா இந்தியாவானது சென்னை - பெங்களூரு மற்றும் சென்னை - புவனேஷவர் வழித்தடங்களில் தினமும் 5 விமானங்களை இயக்க முடிவு செய்துள்ளது.
எப்போது முதல் சென்னை வழித்தடம்?
டாடா - ஏர்ஏசியாவின் கூட்டு நிறுவனமான ஏர்ஏசியா இந்தியா புதிய வழித்தடங்களில் வருகின்ற 2018 பிப்ரவரி 24 முதல் சேவையினை மீண்டும் சென்னையில் இருந்து அளிக்க உள்ளது.
பங்கு சந்தை
ஏர்ஏசியா இந்திய நிறுவனத்தின் பங்குகளை விரைவில் ஐபிஓ மூலம் பங்கு சந்தையில் வெளியிட இருப்பதாகவும் தலைமை செயல் அதிகாரியான டோனி பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications