2018ல் இந்திய வேலைவாய்ப்பு சந்தை எப்படி இருக்கும்? யாருக்கெல்லாம் வேலை கிடைக்கும்?

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

வேலை! இந்த இரண்டெழுத்துச் சொல் ஒரு மனிதனின் கனவுகளில் ஒன்று. என்ன நாம் அனைவரும் நமக்குப் பிடித்த வேலையைச் செய்வதை விட கிடைத்த வேலையைச் செய்து கொண்டிருக்கின்றோம். கிடைத்த வேலையில் இருந்து பிடித்த வேலைக்கு மாற விரும்பினால், அங்கு வேலை காலி இல்லை.

வேலை தேட நாம் செய்து கொண்டிருக்கும் வேலையை விட்டு விடலாமா என்றால், அதிலும் பலத்த சந்தேகங்கள். என்ன செய்வது. இந்தக் கேள்வி நாம் அனைவரின் முன்னும் தொக்கி நிற்கின்றது. எனவே இந்த புதிய வருடமாகிய 2018 ல் வேலை வாய்ப்புச் சந்தை எவ்வாறு இருக்கும் என்பதைப் பற்றி சிறிது தெரிந்து கொள்வோமா

ஆட்டோமேஷனும் வேலை வாய்ப்புகளும்.

வேலைவாய்ப்பு சந்தையை இந்த ஆட்டோமேஷன் சூறாவளி கண்டிப்பாக பதம் பார்த்து விடும் என்கிற எதிர்பார்ப்பு அனைத்துத் துறை வல்லுநர்களிடம் நிலவுகின்றது. அவர்கள் அனைவரும் ஆட்டோமேஷன் கண்டிப்பாக வேலை வாய்ப்புகளைப் பாதித்து விடும் என்கிற கவலையில், இந்தத் துறையின் வளர்ச்சியைக் கவனித்து வருகின்றனர்.

கலவையான கனிப்புகள்

தொழில்நுட்ப முன்னேற்றங்களும் அதனுடைய வேலை வாய்ப்பு பாதிப்புகளும் பற்றிய சமீபத்திய கனிப்புகள், தொழில்நுட்ப மாற்றங்கள் , வேலையில் உள்ளவர்களுக்கும் மற்றும் வேலை தேடுபவர்களுக்கும் ஒரு வரம் அல்லது சாபமாக இருக்கலாம் எனத் தெரிவிக்கின்றது.

சம்பள உயர்வு

மெர்ஸெர்ஸ் நிறுவனத்தின் 2017ல் இந்தியாவின் மொத்த ஊதிய கணக்கெடுப்பு அறிக்கை, இந்த ஆண்டு பல்வேறு நிறுவனங்கள் புதிய பணியாளர்களை அதிகமாக பணியமர்த்தக் கூடிய வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த நிலைமை மேலும் சிறிது காலத்திற்கு தொடரும் என்பதால், ஊழியர்களுக்கு 10 சதவீதம் வரை ஊதிய உயர்வு கிடைக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

எத்தனைப் பேருக்கு வேலைக் கிடைக்கும்

செயற்கை நுண்ணறிவு (AI) இன்னும் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும். குறிப்பாகச் சொல்ல வேண்டும் எனில், 2020 க்குள் சுமார் 2.3 மில்லியன் வேலை வாய்ப்புகள் உருவாகும்.

செயற்கை நுண்ணறிவின் மறு பக்கம்.

செயற்கை நுண்ணறிவு (AI) 2020 ஆம் ஆண்டிற்குள் சுமார் 1.8 மில்லியனுக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளைப் பறித்து விடும் என கார்ட்னர் அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. நடுத்தர மற்றும் குறைந்த நிலை பணியாளர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுவர்.

வேலையின் தரம்

சமீபத்தில், யூபிஎஸ் அறிக்கையானது, இந்தியாவில் வேலைவாய்ப்புகளின் தரம் ஆட்டோமேஷன் துறையில் ஏற்படும் உலகளாவிய மாற்றத்தின் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்படலாம் என்று சுட்டிக்காட்டியது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் 4 மில்லியன் வேலைகள் இந்தியாவில் உருவாக்கப்படக் கூடிய நிலையிலும் இது உள்நாட்டு வேலை வாய்ப்பு சந்தையில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும்.

தொழிலாளர்களின் பிரளயம்

யூபிஎஸ் அறிக்கையின் படி வேலை வாய்ப்பு தேடும் வயதை அடைந்த சுமார் 13 மில்லியன் மக்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஆண்டுதோறும் இந்தியாவில் வேலை வாய்ப்பு சந்தையில் நுழைவார்கள்.அடுத்த ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளில் அவர்களில் சுமார் 7 மில்லியன் மக்கள் வேலை தேடத் தொடங்குவர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

This is what the job market will look like in 2018

This is what the job market will look like in 2018
Story first published: Tuesday, January 16, 2018, 17:41 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns