வரலாறு காணாத அளவில் தாறுமாறாக டீசல் விலை உயர்வு.. மக்கள் அவதி!

சென்னை: இந்தியாவில் டீசல் விலை எப்போதும் இல்லாத அளவிற்குச் செவ்வாய்க்கிழமை உயர்ந்துள்ளது. உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, பணவீக்கம் போன்றவற்றால் இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியானது இந்திய பொருளாதாரத்தில் மிகப் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தி வருகிறது.

நேற்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 64.89 ரூபாயாக இருந்தது. அதுவே இன்று 65.08 ரூபாயாக அதிகரித்துள்ளது. அதே நேரம் சென்னையில் பெட்ரோல் விலை நேற்று 73.67 ரூபாயாகவும், இன்று 73.80 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

தொடர் விலை உயர்வு

தொடர் விலை உயர்வு

சென்ற டிசம்பர் மாதம் முதல் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது. 2014 ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு இதுவே டீசல் விலையில் அதிகபட்சம் என்றும் இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இறக்குமதி

இறக்குமதி

ஜூன் மாதம் முதல் இந்தியாவில் கச்சா எண்ணெய் இறக்குமதியானது 64 சதவீதம் வரை விலை உயர்ந்துகொண்டு வந்துள்ளதால் பணவீக்கமும் அதிகரித்துள்ளது.

கூடுதல் செலவு

கூடுதல் செலவு

வணிகத் துறை அமைச்சகமானது சென்ற ஆண்டு எண்ணெய் இறக்குமதிக்காகச் செலவு செய்ததை விடக் கூடுதலாக 28 சதவீதம் என 66,464 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது.

ஏற்றுமதி

ஏற்றுமதி

கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து ஒரு பக்கம் விலை உயர்ந்து வரும் அதே நேரம் இந்திய அரசு அண்டை நாடுகளான நேப்பால், வங்க தேசம், மியான்மர் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்து வருகிறது. அது மட்டும் இல்லாமல் புதிதாக எண்ணெய் சுத்திகரிப்பு மையங்களையும் அமைத்து வருகிறது.

மக்கள் அவதி

மக்கள் அவதி

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் காய்கறி விலையும் உயர்ந்து காணப்படுகிறது. இதனால் மக்கள் கூடாதலாகச் செலவு செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

எலெக்ட்ரிக் வாகனங்கள்

எலெக்ட்ரிக் வாகனங்கள்

மத்திய அரசு கச்சா எண்ணெய் இறக்குமதியைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பை ஊக்குவித்து வருகிறது. இதற்காகப் பல சலுகைகளை வருகின்ற பட்ஜெட்டில் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம்

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம்

WTI கச்சா எண்ணெய் பேரலுக்கு 64.30 டாலர்களாகவும் பிரெண்ட் கச்சா எண்ணெய் பேரலுக்கு 69.87 டாலராகவும் இன்று விலை உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை நிலவரத்தை தெரிந்துகொள்ள இங்குக் கிளிக் செய்யவும்.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+