ஏர்ஏசியா நிறுவனம் வருகின்ற 2018 பிப்ரவரி 24-ம் தேதி முதல் சென்னை வழித்தடத்தில் இரண்டு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் விமானச் சேவை அளிக்க உள்ளதாக அறிவித்த நிலையில் தற்போது 1,299 ரூபாடில் சென்னை - பெங்களூரு செல்லும் ஆஃபரையும் அறிவித்துள்ளது.
புதிய வழித்தடங்கள்
புதிய வழித்தடங்களான சென்னை - பெங்களூரு செல்ல 1,299 ரூபாய் விமானக் கட்டணம் என்றும், சென்னை - புவனேஷவர் செல்ல 2,699 ரூபாய் விமானக் கட்டணம் என்றும் அறிவித்துள்ளனர்.
டிக்கெட் எங்குக் கிடைக்கும்
www.airasia.com இணையதளம் மற்றும் ஏர் ஏசியா இந்தியா செயலியில் மட்டுமே இந்தச் சலுகை விலை டிக்கெட் கிடைக்கும்.
சலுகை காலம்
ஏர்ஏசியாவின் சலுகை விலையில் ஜனவரி 21 வரை டிக்கெட் புக் செய்து 2018 பிப்ரவரி முதல் 2019 ஜனவர் 31 வரை பயணம் செய்யலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
டிக்கெட்கள்
குறைந்த அளவிலான டிக்கெட்கள் மட்டுமே ஏர்ஏசியாவின் சலுகை விலையில் கிடைக்கும் என்றும் ஒரு வழி பயணத்திற்கு மட்டும் தான் சலுகை என்றும் தெரிவித்துள்ளனர்.
ரீஃபண்டு
டிக்கெட் புக் செய்த பிரகு ரத்து செய்தால் கட்டணம் திருப்பி அளிக்கப்பட மாட்டாது. டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலம் டிக்கெட் புக் செய்யும் போது கூடுதலாகச் செயல்பாட்டுக் கட்டணம் வசூலிக்கப்படும்.
குறிப்பு
சலுகை விலையில் பயணம் செய்யும் போது பயணத்திற்குத் தேவையான சரியான அடையாள ஆவணங்களை வைத்து இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும் ஏர்ஏசியா தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications