இந்தியாவின் நம்பர் 1 ஐடி அவட்சோர்சிங் நிறுவனமாக டிசிஎஸ் நிறுவனம் சென்ற மாதம் தனது போட்டி நிறுவனங்களான இன்ஃபோசிஸ், எஸ்சிஎல், விப்ரோ நிறுவனங்கள் வாயை பிளக்கும் அளவிற்கு 2.25 பில்லியன் டாலர் மதிப்பிலான பிராஜக்ட் ஒன்றை பிரட்டன் நாட்டைத் தலைமையிடமக கொண்டு செயல்பட்டு வரும் நீல்சென் நிறுவனத்திடம் பெற்றது.
தற்போது மீண்டும் ஐரோப்பியா நாடுகளைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சேமிப்பு மற்றும் முதலீடுகள் சார்ந்த நிதி சேவைகள் பிஸ்னஸ் செய்து வரும் எம் & ஜி புருடென்ஷியல் நிறுவனத்திடம் இருந்து செவ்வாய் கிழமை 690 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தினைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
10 ஆண்டுகள்
டிசிஎஸ் நிறுவனம் பெற்றுள்ள இந்த 690 மில்லியன் டாலர் பிராஜெட் மூலமாக 10 வருடங்களுக்கு எம் & ஜி புருடென்ஷியல் நிறுவனத்திற்கான ஐடி சேவையினை டிசிஎஸ் நிறுவனம் அளிக்க உள்ளது.
கேப்பிட்டா - டிசிஎஸ் டிலிஜெண்டா
எம் & ஜி புருடென்ஷியல் நிறுவனத்திற்குக் கடந்த 10 வருடமாகக் கேப்பிட்டா நிறுவனம் ஐடி சேவையினை வழங்கி வந்தது என்றும் தற்போது நான்கு மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்ட லைப் மற்றும் ஓய்வூதிய ஒப்பந்த நிர்வாகம் டிசிஎஸ்-ன் டிலிஜெண்டா நிறுவனம் வசம் சென்றுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
வேலை வாய்ப்புகள்
பிரட்டனில் கேப்பிட்டா நிறுவனம் வசம் உள்ள எம் & ஜி புருடென்ஷியல் நிறுவனத்தின் 1,100 பணியிடங்கள் டியூப் மூலமாக டிலிஜெண்டா நிறுவனத்திற்கு அளிக்க உள்ளனர். மேலும் 700 நபர்களுக்கு இந்தப் பிராஜெக்ட் கீழ் இந்தியாவில் வேலை வாய்ப்பு கிடைக்க உள்ளது.
பங்குகள்
டிசிஎஸ் நிறுவனத்தின் இந்த அறிவிப்பினை அடுத்து 2 சதவீதம் வரை பங்குகளின் விலை உயர்ந்தது. புதன்கிழமையும் பங்குகள் விலை 38.15 புள்ளிகள் வரை உயர்வை சந்தித்துள்ளன.
போட்டி நிறுவனங்கள்
டிசிஎஸ் நிறுவனம் அடுத்தடுத்து மிகப் பெரிய பிராஜெட்களைப் பெற்று வரும் நிலையில் இன்ஃபோசிஸ், விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்கள் அதிகப்படியான வாடிக்கையாளர்களை அமெரிக்காவில் வைத்து வருவதால் டிரம்ப் அரசு எடுக்கும் நடவடிக்கையில் ஊழியர்களை மீண்டும் இந்தியாவிற்குத் திரும்பப் பெறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
லாபத்தில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்..
ஜிஎஸ்டி கீழ் பெட்ரோல்


Click it and Unblock the Notifications