இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் 6 காலாண்டுகளாக அதாவது ஜியோவின் அறிமுகத்திற்குப் பின்பு தொடர்ந்து லாபத்தில் சரிவை மட்டுமே சந்தித்து வருகிறது.
முகேஷ் அம்பானி தலைமைவகிக்கும் ரிலையன்ஸ் குழுமத்தின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ஜியோ அறிமுகம் மற்றும் மலிவான கட்டண சேவை உடன் போட்டி போடும் வகையில், ஏர்டெல் ஜியோவிற்கு இணையாகக் கட்டணத்தைக் குறைத்து சேவையை அளிக்கத் துவங்கியது.
இதனால் வருவாயிலும் லாபத்திலும் ஏர்டெல் கடுமையாகப் பாதிப்பைச் சந்தித்து வருகிறது.
டிசம்பர் காலாண்டு
இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான சுனில் மிட்டல் தலைமை வகிக்கும் பார்தி ஏர்டெல் நிறுவனம் டிசம்பர் காலாண்டில் லாபத்தில் 11 சதவீத சரிவை சந்தித்து லாபத்தின் அளவு 306 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.
இக்காலகட்டத்தில் ஏர்டெல் நிறுவனம் 359 கோடி ரூபாய் அளவிலான லாபத்தைப் பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கணிப்பை விடக் குறைவான அளவைப் பதிவு செய்துள்ளது.
வருவாய்
செப்டம்பர் காலாண்டை ஒப்பிடுகையில் டிசம்பர் காலாண்டில் ஏர்டெல் நிறுவனத்தின் வருவாய் அளவு 6.7 சதவீத குறைந்து 20,320 கோடி ரூபாயாக உள்ளது.
சராசரி வருவாய்
மேலும் ஏர்டெல் நிறுவனத்தில் இருக்கும் வாடிக்கையாளர்கள் மூலம் சராசரியாக 123 ரூபாய் அளவிலான வருமானத்தைப் பெற்றுகிறது.
இண்டர்கணெக்ஷன் சார்ஜ் குறைக்கப்பட்ட காரணத்தால் சராசரி வருவாய் அதிகளவில் குறைந்துள்ளது.
பங்கு மதிப்பு
இன்றைய வர்த்தக முடிவில் பார்தி ஏர்டெல் நிறுவன பங்குகள் 1.17 சதவீதம் வரையில் குறைந்து 494.50 ரூபாய் வரையில் சரிந்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications