2018-19ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் முக்கியக் குறிக்கோளாக இருக்கப்போவது புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கப்போவது தான்.
இதுகுறித்து தான் தற்போது நிதியமைச்சகமும், பல துறை சார்ந்த தலைவர்கள் மற்றும் நிர்வாகங்கள் மத்தியில் விவாதம் செய்யப்பட்டு வருகிறது.
வரிச் சலுகை
பல்வேறு நாடுகளில், நிறுவனங்கள் கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்கினால் அவர்களுக்கு அரசு வரிச் சலுகை அளிக்கும், இதன் அடிப்படையில் நிறுவனமும் ஆர்வமாக அதிகளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் ஈடுபடுகிறது.
80JJJAA வருமான வரிச் சட்டம்
இந்தியாவிலும் இதுபோன்ற சட்டம் உள்ளது, நிறுவனங்கள் அதிகளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கினால் 80JJJAA வருமான வரிசட்டத்தின் கீழ் வரிச் சலுகை அளிக்கப்படுகிறது. இதன் மூலம் ஊழியர்களுக்குச் செலவிடப்படும் கூடுதல் தொகையில் 30 சதவீத தொகையை 3 வருடங்களுக்கு வரிச் சலுகை அளிக்கப்படுகிறது.
தளர்வு
ஆனால் இந்தச் சலுகையைப் பெற சில கட்டுப்பாடுகள் உள்ளது, இதனால் இப்பிரிவு சட்டத்தின் கீழ் நிறுவழனங்கள் அதிகளவிலான லாபத்தை அடைவதில்லை. இந்நிலையில், இப்பிரிவு சட்டத்தில் சில சலுகைகளை அளிப்பதன் மூலம் இந்தியாவில் கூடுதலான வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என மத்திய அரசு நம்புகிறது.
பிப்ரவரி 1
இப்புதிய மாற்றங்கள் குறித்த அறிவிப்புகளும் மத்திய அரசு பிப்ரவரி 1ஆம் தேதி வெளியிடும் தனது பட்ஜெட் அறிக்கையில் வெளியிடும் எனத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications