டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த 3-ம் காலாண்டில் யெஸ் வங்கியின் லாபம் 22 சதவீதம் உயர்ந்தது மட்டும் இல்லாமல் சொத்துக்களின் தரமும் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
ரானா கபூர் தலைமையில் இயங்கி வரும் யெஸ் வங்கி சென்ற வருடத்துடன் ஒப்பிடும் போது நிகர லாபம் 22 சதவீதம் உயர்ந்து 1,077 கோடி ரூபாய் பெற்றுள்ளது.
வருவாய்
யெஸ் வங்கியின் நிகர வட்டி வருமானம் 26.8 சதவீதம் உயர்ந்து 1,889 கோடியாக உள்ளது. இது 1,935 கோடி ரூபாயாக வரும் என்று எதிர்பார்த்த நிலையில் சற்று குறைந்துள்ளது. நிகர வட்டி அளவு 3.5 சதவீதமாக உள்ளது.
ரீடெய்ல் வங்கி சேவை
இந்த வளர்ச்சியானது ரீடெய்ல் வங்கி பிரிவில் அளித்த கடன் மதிப்பு 11.8 சதவீதம் என இரட்டிப்பானதே முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது.
யெஸ் வங்கியின் இருப்புநிலை மதிப்பு 1.7 லட்சம் கோடி ரூபாய் கடன் மதிப்புடன் 2.5 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
வராக் கடன்
செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் வராக் கடன் அதிகமாக இருந்த நிலையில் மூன்றாம் காலாண்டு சற்று உயர்வை அளித்துள்ளது. செப்டம்பர் காலாண்டில் 1.72 சதவீதமாக இருந்த வராக் கடன் மதிப்பு டிசம்பர் மாத காலாண்டில் 1.72 சதவீதமாகச் சரிந்துள்ளது. நிகர வராக் கடன் விகிதமானது 1.04 சதவீதத்தில் இருந்து 0.93 சதவீதமாகக் குறைந்துள்ளது.
செப்டம்பர் மாத காலாண்டில் 447 கோடி ரூபாயாக இருந்த வரா கடனை 421.3 கோடி ரூபாயாக யெஸ் வங்கி குறைத்துள்ளது.
டெபாசிட் வளர்ச்சி
சேமிப்புக் கணக்குகளில் 45.4 சதவீதம் வரையிலும், நடப்புக் கணக்குகளில் 53 சதவீதம் வரையிலும் டெபாசிட்களை யெஸ் வங்கி அத்திக்கைத்துள்ளத்து.
பங்குகள்
யெஸ் வங்கியின் பங்குகள் இன்று 0.66 சதவீதம் என 2.25 சதவீதம் சரிந்து 340.25 ரூபாய் ஒரு பங்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications