இந்தியாவின் நான்காம் மிகப் பெரிய ஐடி நிறுவனமான எச்சிஎல் வெள்ளிக்கிழமை டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த 3ம் காலாண்டிற்கான அறிக்கையினை வெளியிட்டது. அதில் 6% வரையில் நிகர லாபம் அதிகரித்து 2,194 கோடி ரூபாய்ப் பெற்றுள்ளதாக எச்சிஎல் கூறியுள்ளது.
இதே காலாண்டில் ஒரு வருடத்திற்கு முன்பு எச்சிஎல் நிறுவனம் 2,070 கோடி ரூபாய் வருவாயினைப் பெற்றதாக அறிவித்து இருந்தது.
வருவாய்
சென்ற காலாண்டில் எச்சிஎல் நிறுவனத்தின் வருவாய் 8.4 சதவீதம் உயர்ந்து 12,808 கோடி பெற்றதாகவும் இதுவே சென்ற ஆண்டு 11,814 கோடியாக இருந்தது எனவும் தெரிவித்துள்ளனர்.
முக்கியமான காலாண்டு
நடப்பு காலாண்டின் துவக்கத்தில் நிலையான வளர்ச்சியாகத் தற்போது வரை 3.3 சதவீதம் பெற்றுள்ளதாகவும், ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 11.2 சதவீத வளர்ச்சியினை நிறுவனம் அடைந்து வருவதாகும் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சி விஜயகுமார் கூறினார்.
எச்சில் நிறுவனத்திற்கு இது மிக முக்கியமான காலாண்டு என்றும் இது வரை 20 ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
டிவிடண்ட்
எச்சிஎல் நிறுவனத்தில் முதலீடுகள் செய்துள்ளவர்களுக்கு ஒரு பங்குக்கு 2 ரூபாய் என டிவிடண்ட் அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஊழியர்கள் எண்ணிக்கை
சென்ற காலாண்டில் மட்டும் எச்சில் நிறுவனத்தில் புதியதாக 251 நபர்கள் பணிக்கு எடுக்கப்பட்டுள்ளனர் என்றும் மொத்தமாக 1,19,291 ஊழியர்கள் பணிபுரிந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
வெளிநாட்டு வருவாய்
எச்சிஎல் நிறுவனத்தில் சென்ற வருடத்துடன் ஒப்பிடுகையில் டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் அமெரிக்க வருவாய் 16.6 சதவீதம் வரை அதிகரித்துள்ளது, அதே நேரம் ஐரோப்பிய மற்றும் பிற நாடுகளில் இருந்து பெறப்பட்ட வருவாய் 2.5 சதவீதம் உயர்ந்துள்ளது.
பங்குச் சந்தை
வெள்ளிக்கிழமை காலாண்டு அறிக்கை வெளியிட்ட பிறகு எச்சிஎல் டெக்னாலஜிஸ் பங்குகள் 0.29 சதவீதம் என 2.75 புள்ளிகள் உயர்ந்து 957.60 சதவீதமாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications