மும்பை: இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய வங்கி நிறுவனமான எச்டிஎப்சி டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாம் காலாண்டில் 20.10 சதவீதம் நிகர லாபம் உயர்ந்து 4,4642.6 கோடி ரூபாயாக உள்ளதாக அறிவித்துள்ளது.
சென்ற ஆண்டு அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் 3,865.33 கோடி ரூபாய் நிகர லாபத்தினை எச்டிஎப்சி பெற்று இருந்தது.
வருவாய்
சென்ற ஆண்டு இதே காலாண்டில் 20,748.27 கோடி ரூபாயாக இருந்து மொத்த வருவாய் நடப்பு நிதி ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 17.84 சதவீதம் உயர்ந்து 24,450.44 கோடியாக உள்ளது.
நிகர வட்டி வருவாய்
நிகர வட்டி வருவாயானது 24.1 சதவீதம் உயர்ந்து 140,314.3 கோடியாக பெற்றுள்ளது. இதுவே சென்ற ஆண்டு 8,309.1 கோடியாக இருந்தது.
வரா கடன்
அதே நேரம் சென்ற ஆண்டு 0.32 சதவீதமாக இருந்த வரா கடனின் அளவு என்பது 0.44 சதவீதமாக உயர்ந்துள்ளது.
பங்கு சந்தை
இன்றைய பங்கு சந்தை முடிவில் எச்டிபெசி வங்கியின் பங்குகள் விலை 1 சதவீதம் என 19.40 புள்ளிகள் உயர்ந்து 1,951.20 ரூபாய் ஒரு பங்கு என வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது.


Click it and Unblock the Notifications