எண்ணெய் மற்றும் டெலிகாம் துறையில் போட்டி நிறுவனங்களை மிரளச் செய்யும் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வெள்ளிக்கிழமை டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் 25 சதவீத நிகர லாப உயர்வுடன் 9,423 கோடி ரூபாயினைப் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.
இதே காலாண்டில் சென்ற ஆண்டு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 7,533 கோடி ரூபாய் நிகர லாபத்தினைப் பெற்று இருந்தது.
மொத்த வருவாய்
நிறுவனத்தின் செயல்பாடுகளில் இருந்து சென்ற காலாண்டில் வருவாயானது 21.74 சதவீதம் உயர்ந்து 1,02,500 கோடி ரூபாய் பெற்றுள்ளதாகவும் சென்ற வருடம் இதே காலாண்டில் 84,189 கோடி ரூபாய் பெற்று இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
எண்ணெய் சுத்திகரிப்பு
எண்ணெய் சுத்திகரிப்பில் 2017-ம் ஆண்டு ஒரு வேரலுக்கு 10.8 டாலர் லாபம் பெற்று வந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 2017-2018 நிதி ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 11.6 டாலர் ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
ஜியோ
டெலிகாம் பிரிவான ரிலையன்ஸ் ஜியோ மூன்றாம் காலாண்டில் முதன் முறையாக 504 கோடி ரூபாய் நிகர லாபத்தினைப் பதிவு செய்துள்ளது. இதுவே இரண்டாம் காலாண்டில் 271 கோடி ரூபாய் நட்டத்தில் இருந்தது.
பெட்ரோகெமிக்கல்ஸ்
டிசம்பர் காலாண்டில் பெட்ரோகெமிக்கல்ஸ் பிரிவில் இருந்து மட்டும் வருவாயானது 47.6 சதவீதம் உயர்ந்து 33,726 கோடி ரூபாய்ப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
எண்ணெய் மற்றும் எரிவாயு
எண்ணெய் மற்றும் எரிவாயு பிரிவில் வருவாய் 34.2 சதவீதம் உயர்ந்து 1,631 கோடி ரூபாய்ப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
கடன்
2017 மார்ச் 31-ம் தேதி வரை 1,96,601 கோடியாக இருந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன கடன் 2017 டிசம்பர் 31 தேதி வரையில் 2,13,206 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications