பல மாதங்களாகச் செய்யப்பட்டு வந்த ஆலோசனை சனிக்கிழமை முடிவிற்கு வந்துள்ளது.
இந்தியாவில் மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனமான ஓஎன்ஜிசி, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்ரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் 51.11 சதவீத பங்குகளை வாங்குவதாக முடிவு செய்து இறுதியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
37,000 கோடி ரூபாய்
ஓஎன்ஜிசி நிறுவனம் வாங்கும் 51.11 சதவீத ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்ரேஷன் பங்குகளில் மதிப்பு மட்டும் 36,915 கோடி ரூபாய்.
அருண் ஜேட்லி
பங்கு கைப்பற்றும் ஆலோசனை கூட்டத்தைத் தலைமையேற்று நடத்திய மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்ரேஷன் பங்கு மதிப்பை ஓஎன்ஜிசி, நிறுவனத்திற்கு உறுதி செய்து விற்பனைக்கான ஒப்புதலை அளித்தார்.
பணம்
51.11 சதவீத பங்குகளைக் கைப்பற்றும் ஓஎன்ஜிசி, நிறுவனம் 36,915 கோடி ரூபாயை பங்கு பரிமாற்ற முறையில் அளிக்காமல் பணமாக அளிக்க முடிவு செய்துள்ளது.
அரசு பங்கீடு
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்ரேஷன் நிறுவனத்தில் அரசிடம் இருக்கும் 778,845,375 பங்குகளை 473.97 ரூபாய் அடிப்படையில் சுமார் 37,000 கோடி ரூபாய்க்கு ஓஎன்ஜிசி நிறுவனம் கைப்பற்றுகிறது.
தற்போது சந்தை விலை 416.55 ரூபாய் இருக்கும் நிலையில் 14 சதவீத அதிக மதிப்பில் ஓஎன்ஜிசி, ஹெச்பி நிறுவனப் பங்குகளைக் கைப்பற்றியுள்ளது.
ஒற்றை நிறுவனம்
இந்தியாவில் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு துறையில் இருக்கும் அரசு நிறுவனங்களை இணைத்து ஒற்றை நிறுவனமாக, அதாவது உலக நாடுகளில் இருக்கும் முன்னணி நிறுவனங்களுக்கு இணையாக ஒரு நிறுவனத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
இதன் அடிப்படையில் தான் தற்போது பங்குகளைக் கைப்பற்றியுள்ளது. இதேபோல் அரசிடம் இருக்கும் பங்கு இருப்புகளைக் குறைக்கும் விதமாகவும் இந்தப் பங்கு கைப்பற்றல் பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications