இந்தியாவின் மூன்றாம் மிகப் பெரிய தனியார் வங்கி நிறுவனமான ஆக்சிஸ் வங்கி இன்று தனது மூன்றாம் காலாண்டு அறிக்கையினை வெளியிட்டுள்ளது. ஆக்சிஸ் வங்கி வல்லுநர்கள் எதிர்பார்த்ததை விடக் கூடுதலாக லாபம் பெற்று அசத்தியுள்ளது.
டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாம் காலாண்டில் 25.3 சதவீதம் வரை லாபம் உயர்ந்து 726.4 கோடி நிகர லாபத்தினைப் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. சென்ற ஆண்டு 580 கோடி ரூபாய் லாபத்தினை மூன்றாம் காலாண்டில் பதிவு செய்திருந்தது.
வட்டி வருவாய்
நிகர வட்டி வருவாய், வட்டி வருவாய் மற்றும் செலுத்தப்பட்ட வட்டி என 9.2 சதவீத வளர்ச்சியுடன் 4,731.52 கோடி ரூபாய் பெற்றுள்ளது. சென்ற ஆண்டு இதே காலாண்டில் 4,333.73 கோடி ரூபாய் வருவாயினைப் பெற்று இருந்தது.
வரா கடன்
இரண்டாம் காலாண்டில் 5.9 சதவீதமாக இருந்த வரா கடனின் அளவானது 5.28 சதவீதமாகக் குறைந்துள்ளது என வங்கி அறிவித்துள்ளது.
பங்குகள்
பிற்பகள் 2:20 மணி நிலவரத்தின் படி பங்குகள் விலையானது 4.46 சதவீதம் என 26.35 புள்ளிகள் உயர்ந்து 616.60 ரூபாய் ஒரு பங்கு என வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
முழு அறிக்கை
மும்பை பங்கு சந்தையில் ஆக்சிஸ் வங்கி தாக்கல் செய்துள்ள மூன்றாம் காலாண்டு அறிக்கை முழு விவரம்.


Click it and Unblock the Notifications