பிட்காயின் விலை சரிந்தாலும் இன்னும் 100 ஆண்டுகளுக்குக் கண்டிப்பாக இருக்கும்..!
பிட்காயின் மதிப்புத் தற்போது சரிந்தாலும் இன்னும் 100 ஆண்டுகள் வரை பயன்பாட்டில் இருக்கும் என்று நோபல் பரிசு வென்ற பொருளாதார நிபுணர் ராபர்ட் ஷில்லர் கூறியுள்ளார். தற்போது பிட்காயினிற்கு ஒரு மதிப்பு உள்ளது எனக் கூறி வந்தாலும் அது ஜீரோ தான் என்றும் அவர் குறிப்பிட்டார்.
உலகின் மூன்றாம் மிகப் பெரிய கோடிஸ்வரர் வாரன் பஃப்பெட் பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சிகள் மிக மோசமான நிலையில் வெளியேறும் என்று குறியிருந்தார்.

டிசம்பர் மாதம் அனைவரும் ஆச்சரியப்படும் அளவிற்கு விலை உயர்ந்த பிட்காடின் 20,000 டாலர்களை எட்டியது. ஆனால் தற்போது 12,000 டாலராகச் சரிந்துள்ளது.
பிட்காயின் மீதான மதிப்பானது எப்போது குறையும், இது குறித்து உங்கள் கருத்துக்களைக் கீழ் உள்ளிடவும்.


Click it and Unblock the Notifications