பொதுத் துறை மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் பிஎப் கணக்கினை பயன்படுத்தி வருகிறார்கள். இந்தப் பிஎப் கணக்கிற்கான வட்டி விகிதத்தில் 2018-ம் ஆண்டு மத்திய அரசு எந்த மாற்றமும் செய்யாது என்று தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்துள்ள தகவல்கள் கூறுகின்றன.
சென்ற ஆண்டு வழங்கிய அதே 8.65 சதவீத வட்டி விகிதத்தினை மத்திய அரசு இந்த அண்டு பிஎப் கணக்குகளுக்கு வழங்க இருக்கின்றது. மத்திய அரசு ஊழியர்களுக்குக் கொடுக்க வேண்டிய 0.15 சதவீத கூடுதல் லாபத்திற்காகப் பங்கு சந்தையில் முதலீடு செய்ய உள்ளது.
பங்குகள் விற்பனை
மத்திய அரசு குறிப்பிட்ட 2015-ம் ஆண்டு வரை ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி ஆணையம் வாங்கியுள்ள குறிப்பிட்ட அளவிலான பங்குகளை விற்று 8.65 சதவீத லாபத்தினை அளிக்க உள்ளது.
வருவாய்
வருங்கால வைப்பு நிதி ஆணையம் 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்று 850 கோடி ரூபாய் கூடுதல் வருவாயினைப் பெற இருக்கிறது. கூடுதல் வருவாயாக வரும் 850 கோடி ரூபாய் பிஎப் வட்டி விகிதத்திற்காகப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கூட்டம்
பிப்ரவரி மாதம் வருங்கால வைப்பு நிதி ஆணையமானது கூட்டம் ஒன்றை நடத்த இருப்பதாகவும் அதில் பங்குகள் விற்பது மற்றும் வட்டி விகிதம் குறித்து முடிவுகளை எடுக்கும் என்றும் கூறுகின்றனர்.
முந்தைய வட்டி விகித நிலை
2016-2017 நிதி ஆண்டில் பிஎப் மீது 8.65 சதவீதம் லாபம் அளிக்கப்பட்டுள்ளது. 2015-2016ம் நிதி ஆண்டில் 8.8 சதவீதமும் மற்றும் 2013 முதல் 2015 வரை 8.75 சதவீதமும் லாபம் அளிக்கப்பட்டு வந்துள்ளது.
வருமான வரி வரம்பு
வர இருக்கும் பட்ஜெட் கூட்டத்தில் 2.5 லட்சம் ரூபாயில் இருந்து 3 லட்சம் ரூபாயாக வரமான வரி வரம்பை மத்திய அரசு உயர்த்தினால் பிஎப் உட்படப் பிற சிறு சேமிப்பு திட்டங்கள் மீதான வட்டி விகிதம் குறையவும் வாய்ப்புகள் உள்ளது.


Click it and Unblock the Notifications