2018-ம் ஆண்டுச் சீனாவை விட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மிக வேகமாக இருக்கும் என்றும் உலகின் 5வது மிகப் பெரிய பங்கு சந்தையாக இந்திய சந்தை இருக்கும் என்றும் அன்மையில் வெளியான அறிக்கை கூறுகின்றது.
உலகின் பிற நாடுகளில் பொருளாதார வளர்ச்சியானது குறைவாக உள்ள நிலையில் இந்தியாவில் நீண்ட காலத்திற்கு ஏற்றவாறு நிலையான பொருளாதாரச் சீர்திருத்தங்கள் நடைபெற்று வருகிறது.
பொருளாதாரம்
உலகளவில் சீனாவை முந்தி இந்தியாவின் பொருளாதாரம் மிகப் பெரியதாக உருவெடுக்கும். உலகின் ஐந்தாம் மிகப் பெரிய பங்குச் சந்தையாக இந்தியா வளர்ச்சி அடையும் என்று கூறப்படுகிறது.
வளர்ந்த நாடுகள்
வளர்ந்த நாடுகள் இரண்டு முதல் 3 சதவீத பொருளாதார வளர்ச்சியினை அடைந்து வரும் நிலையில் இந்தியா 7.5 சதவீதத்தினை இலக்காக வைத்துச் செயல்பட்டு வருகின்றது.
சந்தை
பிற நாடுகளின் சந்தைகளுடன் ஒப்பிடும் போது சீன சந்தை சரிந்து வரும் நிலையில் இந்தியா சந்தையான வளர்ச்சி அடைந்து வருகிறது.
பணவீக்கம்
பங்குச் சந்தைகளில் முதலீடு செய்பவர்கள் 6 முதல் 8 சதவீதம் வலை நிலையான லாபங்களைப் பெற்று வருகின்றனர். பணவீக்கம் அதிகமாக இருப்பதால் சந்தையில் பெரிய அளவில் வருவாய் இல்லை.
உள்நாட்டு வர்த்தகர்கள்
சென்ற காலங்களில் இருந்தது போன்று இல்லாமல் உள்நாட்டு மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டாளர்கள் தான் சந்தையின் போக்கினை மாற்றி வருகிறார்கள். சென்ற ஆண்டு 8 பில்லியன் டாலர்களாக இருந்து உள்நாட்டு முதலீடுகள் நடப்பு ஆண்டில் 15.3 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது.
சாதகங்கள்
ஆதார், ஜன் தன், பண மதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி போன்றவற்றால் புதிய பாதையில் இந்தியா பயணித்து வருகிறது. அதே நேரம் மியூச்சுவல் ஃபண்டு போன்றவற்றின் மூலமாக ஈக்விட்டி முதலீடுகள் அதிகரித்து வருவது இந்திய பங்கு சந்தைக்கு மிகப் பெரிய சாதகமான அம்சங்களை ஏற்படுத்தி வருகிறது.


Click it and Unblock the Notifications