ஏர்ஏசியா இந்தியா நிறுவனம் வார இறுதி விற்பனை சலுகையாக 1,299 ரூபாய் முதல் விமானப் பயணம் செய்யலாம் என்று அறிவித்துள்ளது.
ஏர்ஏசியா நிறுவனம் வரும் பிப்ரவரி மாதம் முதல் இரண்டு வருடங்களுக்கு முன் நிறுத்திய சென்னை வழித்தட விமானச் சேவையினைத் துவங்க உள்ள நிலையில் இரண்டு வாரங்களாக விமான டிக்கெட் சலுகையினை வழங்கி வருகிறது.
சலுகை காலம்
2018 ஜூலை 31 வரையிலான விமானப் பயணங்களுக்கு 2018 ஜனவரி 28 வரை சலுகை விலையில் டிக்கெட்களை வாங்கிப் பயணிக்கலாம் என்று ஏர்ஏசியா அறிவித்துள்ளது.
1,299 ரூபாய் சலுகை உள்ள வழித்தடங்கள்
புவனேஸ்வர் - ராஞ்சி, ராஞ்சி - கொல்கத்தா, பெங்களூர் - கொச்சி, பெங்களூரு - ஹைதெராபாத், பெங்களூரு - சென்னை ஆகிய வழித்தடங்களில் 1,299 ரூபாய் ஆஃபரில் பயணம் செய்ய முடியும்.
பிற வழித்தடங்கள்
கோவா - பெங்களூரு செல்ல 1,499 ரூபாய் என்றும், கவுகாத்தி - இம்பால் செல்ல 1,599 ரூபாய் விமான் டிக்கெர் என்றும், பூனே - பெங்களூரு செல்ல 2,099 ரூபாய் எனவும், கொல்கத்தா - பாக்தோகிறா செல்ல 1,599 ரூபாய் எனவும், ஸ்ரீநகர் - டெல்லி செல்ல 2,099 ரூபாய் எனவும், ஹைதராபாத் - ராஞ்சி செல்ல 2,599 ரூபாய் எனவும், பெங்களூரு - டெல்லி செல்ல 3,199 ரூபாய் எனவும், கோவா - டெல்லி செல்ல 1,299 ரூபாய் விமான் டிக்கெட் எனவும் ஏர்ஏசியா இந்தியா அறிவித்துள்ளது.
டிக்கெட்கள்
குறைந்த அளவிலான டிக்கெட்கள் மட்டுமே ஏர்ஏசியாவின் சலுகை விலையில் கிடைக்கும் என்றும் ஒரு வழி பயணத்திற்கு மட்டும் தான் சலுகை என்றும் தெரிவித்துள்ளனர்.
ரீஃபண்டு
டிக்கெட் புக் செய்த பிரகு ரத்து செய்தால் கட்டணம் திருப்பி அளிக்கப்பட மாட்டாது. டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலம் டிக்கெட் புக் செய்யும் போது கூடுதலாகச் செயல்பாட்டுக் கட்டணம் வசூலிக்கப்படும்.
குறிப்பு
சலுகை விலையில் பயணம் செய்யும் போது பயணத்திற்குத் தேவையான சரியான அடையாள ஆவணங்களை வைத்து இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும் ஏர்ஏசியா தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications