டெலினார் மற்றும் டாடா டெலி சர்வீசஸ் நிறுவனங்கள் முழுமையாகப் பார்தி ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்த பிறகு அங்குப் பணிபுரியும் 4,000 ஊழியர்களின் நிலை என்ன ஆகும் என்று கேள்வி எழுந்துள்ளது.
இரண்டு நிறுவனங்களுடன் இணைந்த பிறகு 15 சதவீத ஊழியர்களை ஆபிரிக்கா கிளைக்கு மாற்ற ஏர்டெல் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக நமக்குக் கிடைத்துள்ள தகவல்கள் கூறுகின்றன.
பணிகள்
அனைத்து ஊழியர்களுக்கும் அவர்களுக்கு ஏற்ப்ப பணியிடங்கள் வழங்கப்படும் என்றும் அதன் படி அவர்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்க ஏர்டெல் முழு ஆதரவைத் தரும் என்றும் கூறுகின்றனர்.
ஊழியர்கள்
நிறுவனங்கள் இணைவு முடிந்த பிறகு ஊழியர்களை எங்கெல்லாம் பணியில் அமர்த்துவது என்ற விவாதங்கள் தற்போது ஏர்டெல் நிறுவனத்தில் துவங்கியுள்ளது. அதிகப்படியான ஊழியர்களை இந்தியாவிலும் குறிப்பிட்ட அளவிலான ஊழியர்களை மட்டும் தங்களது வெளிநாட்டுக் கிளைகளுக்கும், துணை நிறுவனங்களுக்குக் கொண்டு செல்ல இருக்கிறது.
அக்டோபர் மாதம் வரை டாடா டெலி சர்வீசஸ் நிறுவனத்தில் 5,000 ஊழியர்களும், டெலினார் இந்தியாவில் 2,000 ஊழியர்களும் நேரடி பணியாளர்களாக இருந்துள்ளனர்.
ஒப்பந்தம்
டாடா டெலிசர்வீசஸ் நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கிய காரணத்தினால் பார்தி ஏர்டெல் நிறுவனத்திடம் டெலிகாம் சேவையினை அளித்துவிட்டு வெளியேறிவிட்டது. இந்தப் பரிவர்த்தனைக்காக ஏர்டெல் நிறுவனம் டாடா நிறுவனத்திற்கு எந்தத் தொகையினை அளிக்காமல் 40,000 கோடி ரூபாய் கடனிற்கும் பொறுப்பேற்காமல் நிறுவனத்தினைக் கைப்பற்றியுள்ளது.
டாடா டெலி சர்வீசஸ் ஸ்பெக்டர்ம் வாங்கியதற்கான 9,000 முதல் 10,000 கோடி ரூபாய் தொகையிலும் 70 முதல் 80 சதவீதம் வரை டாடா குழுமம் செலுத்திவிடும்.
வாடிக்கையாளர்கள்
இந்த ஒப்பந்தம் முழுமையாக நிறைவேறும் போது 40 மில்லியன் டெலினார் மற்றும் டாடா டெலி சர்வீசஸ் மகாராஷ்டிரா வாடிக்கையாளர்கள் பார்தி ஏர்டெல் நிறுவனத்துடன் இணைவார்கள். இதன் மூலமாக டாடா நிறுவனம் உலகின் மிகப் பெரிய டெலிகாம் சந்தையினை வைத்து இருக்கும் நிறுவனமாக உருவெடுக்கும்.
ஏர்டெல்
இந்திய மொபைல் போன் துறையில் மிகப் பெரிய ஒப்பந்தம் இது என்பதால் டாடா வசம் உள்ள ஸ்பெக்டர்ம்கள் மூலமாக ஏர்டெல் நிறுவனத்தினால் இன்னும் சிறப்பான சேவையினை அளிக்க முடியும் என்றும் பங்குதார்களும் அதிகப் பயனடைவார்கள் என்று சுனில் மிட்டல் கூறினார்.
டாடா குழுமம்
டாடா குழுமம் மற்றும் பங்குதார்களுக்கும் இது சிறந்த மற்றும் மிகவும் உகந்த தீர்வு என்று நிறுவனத்தின் தலைவரான என் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications