நாடாளுமன்றத்தில் பிப்.1 தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் அறிக்கையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீது மத்திய அரசு விதிக்கும் கலால் வரியை குறைக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது, சொல்லப்போனால் மத்திய அரசு வரியை குறைக்கும் கட்டாயத்தில் மூழ்கியுள்ளது என்றே சொல்ல வேண்டும்.
அதுமட்டும் அல்லாமல் எண்ணெய் வள துறையும் 2018-19ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியைக் குறைக்கக் கோரிக்கை விடுத்துள்ளது.
தினசரி விலை மாற்றம்
இந்தியாவில் கடந்த சில மாதங்களாகத் தங்கம் மற்றும் வெள்ளி விலை சர்வதேச சந்தைக்கு ஏற்ப தினசரி விலை மாற்றுவதைப் போலப் பெட்ரோல் மற்றும் டீசல் விலைக்கும் கொண்டு வரப்பட்டது.
இதன் காரணமாக மிகவும் குறுகிய காலகட்டத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 30 சதவீதம் வரையில் உயர்ந்து மக்களை அதிகளவில் பாதித்தது.
வரிக் குறைப்பு
இந்தத் தினசரி விலை மாற்றம், மத்திய மாநில அரச விதிக்கும் வரியை சேர்த்து விலை விதிக்கப்படுகிறது.
இந்நிலையில் நாட்டின் வர்த்தகச் சந்தைக்கு ஏதுவான சூழ்நிலையை உருவாக்கும் விதமாகத் தற்போது மத்திய அரசு தனது பட்ஜெட் அறிக்கையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை குறைக்க முடிவு செய்துள்ளது.
தேர்தல்
2018ஆம் ஆண்டில் பல மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது, அதேபோல் 2019ஆம் ஆண்டிலும் பொதுத்தேர்தல் நடக்க உள்ள நிலையில் மோடி மற்றும் அமித் ஷா தலைமையிலான பிஜேபி அரசு வெற்றிபெற வேண்டும் என்ற திட்டத்துடன் இதன் மீதான வரியை குறைக்க அதிகளவிலான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.
அதிக வரி
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் 50 சதவீத தொகை வரியாக மட்டுமே மக்கள் செலுத்தி வருகின்றனர்.
இதுமட்டும் அல்லாமல் தென் ஆசிய நாடுகளிலேயே இந்தியாவில் தான் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மிகவும் அதிகமாக உள்ளது.
இன்றைய விலை நிலவரம்
தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உடனுக்குடன் தெரிந்துகொள்ளத் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் பிரத்தியேக சேவையைத் துவங்கியுள்ளது.
இந்தியாவை முந்திய சீனாவும், பாகிஸ்தானும்..!
அமெரிக்கா
100% லாபம்
More From GoodReturns

நிர்மலா சீதாராமன் எடுத்த 10 ரூபாய் முடிவு.. அடுத்தடுத்து சிக்கல் காத்திருக்கு.. என்னதான் தீர்வு?

பெட்ரோல், டீசல் விலை குறையாது..? மத்திய அரசின் 10 ரூபாய் விலை குறைப்பு பின் இருக்கும் உண்மை..!!

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: மத்திய அரசு கடும் எச்சரிக்கை!!

பேருந்து டிக்கெட் கட்டணங்கள் குறைப்பு: எரிபொருளை சேமிக்க பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுரை!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுமா? மதிப்பாய்வு முறையை மாற்றிய அரசு

அதிகரிக்கும் பெட்ரோல் தட்டுப்பாடு: இலவச பேருந்துகளை அறிவித்த நாடு!! நாளுக்கு நாள் மோசமாகும் நிலைமை!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications