விமானத்தில் வைஃபை மூலமாக இணையதளம் பெற கட்டணம் எவ்வளவு..!

விரைவில் இந்தியாவில் விமானங்கள் மூலமாகப் பறக்கும் போது இணையதளச் சேவையினை அளிக்க அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளது. அதே நேரம் 20 முதல் 30 சதவீதம் வரையிலான பயணக் கட்டணத்தினை வைஃபை கட்டணமாக வசூலிக்க வாய்ப்புள்ளதாகவும் நமக்குக் கிடைத்துள்ள தகவல்கள் கூறுகின்றன.

விமானத் துறை மற்றும் டிராயின் இந்த முடிவினால் விமானப் பயணிகளுக்கு இணையதளம் மட்டும் இல்லாமல் குரல் அழைப்புகளுக்கான சேவையும் வழங்கப்பட இருக்கிறது.

 யாருக்குப் பயன் அளிக்கும்?

யாருக்குப் பயன் அளிக்கும்?

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணங்கள் எனப் பிஸ்னஸ் கிளாஸ் பயணிகள் இணையதளத்தினைப் பெற்றுப் பயன்படுத்தலாம். ஆனால் இதற்கான கட்டணம் குறைவாக மட்டும் இருக்க வாய்ப்பில்லை.

கட்டணம் எவ்வளவு இருக்கும்?

கட்டணம் எவ்வளவு இருக்கும்?

சர்வதேச தரநிலைகளை வைத்துப் பார்க்கும் போது விமானத்தில் 30 நிமிடங்கள் இணையதளம் பயன்படுத்த 500 முதல் 1,000 ரூபாய் வரை கட்டணங்களாக வசூலிக்க வாய்ப்புள்ளது. விமான நிறுவனங்கள் இணையதளச் சேவையினை இன்மார்சாட் மற்றும் பிற சேவை வழங்குநர் மூலமாகப் பெறலாம்.

அட்வான்ஸ் புக்கிங்

அட்வான்ஸ் புக்கிங்

இந்தியாவில் அட்வான்ஸ் புக்கிங் மூலமாக டிக்கெட் புக் செய்து பயணிக்கும் போது கட்டணம் 1,200 முதல் 2,500 ரூபாய் வரையில் இருக்கும் நிலையில் இந்த இணையதளக் கட்டணமானது அதிகமாக இருக்கும் என்று கூறுகின்றனர்.

ஆய்வு

ஆய்வு

இணையதளச் சேவை வழங்குவதற்கான வழிகள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும், கட்டணம் மற்றும் தேவையினைப் பெருத்தே அமலுக்குக் கொண்டு வர இருப்பதாகத் தனியார் விமானப் போக்குவரத்து நிறுவன அதிகாரி நம்முடன் பகிர்ந்துக்கொண்டார்.

வணிக ரீதியான பயணங்களை மேற்கொள்பவர்களுக்குத் தான் விமானப் பயணங்களின் போது இணையதளம் தேவைப்படும் என்றும் அனைவரும் இதனைப் பயன்படுத்த வாய்ப்பில்லை என்றும் கூறுகின்றனர்.

 

விமான நிறுவனங்கள்

விமான நிறுவனங்கள்

லுஃப்தான்சா, எமிரேட்ஸ், பிரிட்டிஷ் ஏர்வேஸ் மற்றும் டெல்டா போன்ற சில விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் வாட்ஸ் ஆ போன்ற சேவையினைப் பயன்படுத்த இலவசம் இணைய இனைப்பையும் வழங்குகின்றனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+