மத்திய அரசு ஊழியர்களுக்கான 7வது சம்பள கமிஷன் அமலாக்கம் செய்யப்பட்ட நிலையில், குறைந்தபட்ச வருமான வரி அளவை தற்போது இருக்கும் 2.5 லட்சம் ரூபாயில் இருந்து 50,000 ரூபாய் அதிகரித்து 3 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என எஸ்பிஐ ஆய்வு அறிக்கை கூறுகிறது.
வருமான வரி விதிப்பை 3 லட்சம் ரூபாய் வரையில் உயர்த்தினால் சுமார் 75 லட்சம் மக்கள் பயனடைவார்கள் எனவும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
7வது சம்பள கமிஷன்
மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு 7வது சம்பள கமிஷனை அமலாக்கம் செய்யப்பட்டதன் மூலம் மாத சம்பளக்காரர்களின் வருமானம் அதிகரித்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில் வர்த்தகச் சந்தை வளர்ச்சிக்கு ஏதுவாகக் குறைந்தபட்ச வருமான வரி விதிப்பு அளவை 3 லட்சம் ரூபாய் வரையில் உயர்த்துவது சரியான முடிவாக இருக்கும் என எஸ்பிஐ எகோவிராப் அறிக்கை கூறுகிறது.
வைப்பு நிதி
இதுமட்டும் அல்லாமல் வங்கி வைப்பு நிதி மூலம் கிடைக்கும் வட்டி வருமானத்திற்குக் கூடுதல் வரிச் சலுகை அல்லது வரி விலக்கு அளிப்பதன் மூலம் வங்கிகளில் அதிகளவிலான நிதி கிடைக்கும் வாய்ப்பும், மக்களுக்குக் கூடுதல் நன்மையும் கிடைக்கும் எனவும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
10,000 ரூபாய்
தற்போது நடைமுறையில் வருடத்திற்கு 10,000 ரூபாய் அளவிலான வைப்பு நிதி வட்டி வருமானத்திற்க முழுமையான வரிச் சலுகை பெறலாம், இத்தொகைக்கு மேல் கிடைக்கும் வட்டி வருமானத்தை மொத்த வருமானத்தின் கீழ் சேர்த்து வரி செலுத்த வேண்டும்.
வீட்டுக் கடன்
வீட்டுக்கடன் பிரிவில் வருடத்திற்கு 2 வருடத்திற்கு வருமான வரிச் சலுகை அளிக்கும் நிலையில் இதனை 2.5 லட்சம் வரையில் உயர்த்தும் போது வீட்டுக் கடன் வாங்கிய சுமார் சுமார் 75 லட்சம் பேர் பயன் அடைவார்கள்.
இதன் மூலம் மத்திய அரசுக்கு 7,500 கோடி ரூபாய்க் கூடுதலாகச் செலவாகும்.
குறைந்தபட்ச வருமான வரி விதிப்பு
1990-91 நிதியாண்டில் வெறும் 22,000 ரூபாயாக இருந்தாகக் குறைந்தபட்ச வருமான வரி விதிப்புப் படிப்படியாக 2014-15ஆம் நிதியாண்டில் சுமார் 2.5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications