இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமாக விளங்கும் டிசிஎஸ் நிறுவனம் 20 சதவீத வேலைவாய்ப்புகளை வெளிநாட்டு மக்களுக்கு அளித்துள்ளது.
ஏற்கனவே ஐடித்துறையில் பணிநீக்கம், அமெரிக்காவில் இருக்கும் இந்திய ஊழியர்களைத் தாய்நாட்டிற்குத் திரும்ப அனுப்புவது போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் தற்போது டிசிஎஸ் நிறுவனத்தின் இந்தச் செயல் ஐடி ஊழியர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவிலான அதிர்ச்சியை அளித்துள்ளது.
ஒரு வருடம்
2017ஆம் ஆண்டில் டிசிஎஸ் நிறுவனம் சுமார் 59,700 பேரை தனது நிறுவன பணியில் அமர்த்தியுள்ளது, இதில் 12,700 வேலைவாய்ப்புகள் வெளிநாட்டுச் சந்தையில் இருக்கும் தனது அலுவலகங்களில் அளிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் டிசிஎஸ் நிறுவனம் இந்திய ஊழியர்களை வெளிநாட்டு அலுவலகப் பணியில் அமர்த்தும் எண்ணிக்கை அதிகளவில் குறைத்துள்ளது.
டிசம்பர் காலாண்டு
2017ஆம் ஆண்டின் அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் மட்டும் சுமார் 3000 வேலைவாய்ப்புகளை வெளிநாடுகளில் டிசிஎஸ் உருவாக்கி வெளிநாட்டவரைப் பணியில் அமர்த்தியுள்ளது.
திறன்
இப்படி வெளிநாட்டவர்களை அதிகளவில் பணியில் அமர்த்துவதன் மூலம் நிறுவனத்திற்குப் பல்வேறு விதமான திறன்களைச் சேர்க்க முடியும் என டிசிஎஸ் நிறுவனத்தின் சீஇஓ ராஜேஷ் கோபிநாத் கூறியுள்ளார்.
மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை
2017ஆம் முடிவில் டிசிஎஸ் நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 3,90,880 ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications