டாவோஸ்: சுவிட்சர்லாந்தில் இருக்கும் டாவோஸில் உலகப் பொருளாதார மாநாடு செவ்வாய்க்கிழமை முதல் நடந்து வருகிறது. இந்தியாவில் செய்யப்படும் வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீட்டுக்காவும், தொழில் வளர்ச்சிக்காகவும் நடந்த இந்த மாநாட்டில் பேசிய மோடி இந்தியாவின் வளர்ச்சி குறித்தும், எதிர்காலம் குறித்தும் இந்தியில் உரையாற்றினார்.
எனவே உலகப் பொருளாதார மாநாட்டில் பிரதமர் மோடி எதைப் பற்றி எல்லாம் பேசினார் என்ற முக்கியக் குறிப்புகளை மட்டும் இங்கும் பார்க்கலாம்.
வளர்ச்சி
30 வருடங்களுக்குப் பிறகு இந்தியா வாக்காளர்கள் அதிகப் பெரும்பான்மையுடன் எங்களுடைய அரசைத் தேர்வு செய்துள்ளனர். அதே நேரம் நாங்கள் குறிப்பிட்ட பிறிவினர் என்று இல்லாமல் அனைவருக்குமான வளர்ச்சி திட்டங்களைக் கொண்டு வருவோம் என்று உறுதி அளித்துள்ளோம் என்றார்.
தரவு பாதுகாப்பு
உலகின் மிகப் பெரிய சொத்தாகத் தரவுகள் தான் வரும் ஆண்டுகளில் இருக்கும் அதே நேரம் அதில் தான் சவால்களும் உள்ளன என்று தரவு பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை குறித்து மோடி குறிப்பிட்டார்.
தொழில்நுட்பம்
இந்தச் சகாப்தத்தில் தொழில்நுட்பங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்று மோடி குறிப்பிட்டார். தொழில்நுட்பம் அரசியல், மனித வாழ்க்கை எனப் பல மாற்றங்களை நிகழ்த்தியுள்ளது என்று கூறினார்.
ஜிடிபி
1997-ம் ஆண்டு 400 பில்லியன் டாலராக இருந்த இந்தியாவின் ஜிடிபி தற்போது 6 மடங்காக உயர்ந்துள்ளதாகக் கூறினார்.
ஒருங்கிணைப்பு மற்றும் ஒற்றுமை
இந்தியாவின் ஒருங்கிணைப்பு மற்றும் ஒற்றுமைகளின் மதிப்பில் எப்போதும் நம்பிக்கை வைத்துள்ளதாகப் பிரதமர் மோடி கூறினார். 'வசுதெய்வ குடும்பகம்' என்ற மோடி கூறிய வரிக்கு அர்த்தம் முழு உலகமும் ஒரு குடும்பம் என்பது ஆகும்.
பிரிக்கப்படாத ஒரு மனிதக்குலம்
இந்தியா எப்போதும் பிரிக்கப்படாத ஒரு மனிதக்குலமாகச் செயல்பட்டு வருவதற்குப் பொருத்தமான ஒரு நாடு என்றும் குறிப்பிட்டார்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications