பொது துறை வங்கி கணக்கில் உள்ள மக்களின் பாதுகாப்பாக உள்ளது.. மறு மூலதன திட்டம் குறித்து அரசு தகவல்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: வங்கிகள் மறு மூலதன திட்டத்திற்காக மத்திய அரசு அக்டோபர் மாதம் 2.11 லட்சம் கோடி ரூபாயினை 2 வருடத்திற்கு அளிக்க இருப்பதாக அறிவித்து இருந்தது. தற்போது அதற்காக 88,139 கோடி ரூபாயினை நடப்பு நிதி ஆண்டில் வழங்க இருப்பதாக அறிவித்துள்ளனர்.

 

அதிக வரா கடனில் சிக்கித் தவித்து வரும் ஐடிபிஐ வங்கி இதில் அதிகபட்சமாக 10,610 கோடி ரூபாயினைப் பெற இருக்கிறது. மேலும் டந்த காலத் தவறுகள் மீண்டும் மீண்டும் செய்யப்படவில்லை என்பதை உறுதிப்படுத்துவதற்கு நிறுவன முறைமை தேவை என்றும் வங்கிகளின் ஆளுமை மிக உயர்ந்த தரத்தை பின்பற்றுகிறது என்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார். எனவே தற்போது இது குறித்த நாம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்களை இங்குப் பார்க்கலாம்.

மக்களவை

மக்களவை

குளிர்காலக் கூட்டத்தின் போது மக்களவை வங்கிகளுக்கான மறு மூலதன திட்டத்திற்காக 80,000 கோடி ரூபாயினை அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது.

வங்கிகள் பெற இருக்கும் தொகை பட்டியல் 1:

வங்கிகள் பெற இருக்கும் தொகை பட்டியல் 1:

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா 8,800 கோடி ரூபாயும், பாங்க் ஆப் இந்தியா 9,232 கோடி ரூபாயும், யூகோ வங்கி 6,507 கோடி ரூபாயும், பஞ்சாப் நேஷனல் வங்கி 5,473 கோடி ரூபாயும், பாங்க் ஆப் பரோடா 5,375 கோடி ரூபாயும், செண்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா 5,158 கோஇ ரூபாயும், கனரா வங்கி 4,865 கோஇ ரூபாயும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 4,694 கோடி ரூபாயும், யூனியன் பாங்க் ஆப் இந்தியா 4,524 கோடி ரூபாயும் மறு மூலதனமாகப் பெற இருக்கின்றன.

வங்கிகள் பெற இருக்கும் மறு மூலதன பட்டியல் 2:
 

வங்கிகள் பெற இருக்கும் மறு மூலதன பட்டியல் 2:

ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் 3,571 கோடி ரூபாயும், தேனா வங்கி 3,045 கோடி ரூபாயும், பாங்க் ஆப் மகாராஷ்டிரா 3,173 கோடி ரூபாயும், யூனைட்டட் பாங்க் ஆப் இந்தியா 2,634 கோடி ரூபாயும், கார்ப்ரேஷன் வங்கி 2,187 கோடி ரூபாயும், சுண்டிகேட் வங்கி 2,839 கோடி ரூபாயும், ஆந்திரா வங்கி 1,890 கோடி ரூபாயும், அலகாபாத் வங்கி 1,500 கோடி ரூபாயும், பஞ்சாப் மற்றும் சிந்த் வங்கி 785 கோடி ரூபாயும் மறு மூலதனமாக மத்திய அரசிடம் இருந்து பெற இருக்கிறது.

நாட்டின் நிதி துறையினைப் பாதிக்காது

நாட்டின் நிதி துறையினைப் பாதிக்காது

80,000 கோடி ரூபாயினை வங்கிகளின் மறு மூலதன திட்டத்திற்காக அளிப்பதினால் அரசுக்கு எந்த நிதி பற்றாக்குறையும் ஏற்படாது என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தப் பத்திரங்களுக்குச் சட்டரீதியான லிக்விடிட்டி விகிதம் இல்லை. அதற்குப் பதிலாக 10 முதல் 15 ஆண்டுகள் வரை இந்த வங்கிகள் அரசு பத்திர திட்டங்களில் முதலீடுகளைச் செய்ய வேண்டும்.

கடமை

கடமை

வங்கிகள் மிகப் பெரிய சிக்கலில் உள்ளன, அதற்கு நாம் தீர்வு காண வேண்டும். பொதுத் துறை வங்கிகளை ஆபத்தில் இருந்து காப்பாற்றுவது நமது கடமை என்றும் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

கண்காணிப்பில் கடன்

கண்காணிப்பில் கடன்

நிதி சேவைகளின் செயலாளர் ராஜீவ் குமார் வங்கிகளின் செயல் திறனைப் பொருத்து இந்த மறு மூலதனம் அளிக்கப்படுகிறது என்றும், இனி 250 கோடி ரூபாய்க்கும் அதிகமாக அளிக்கப்படும் கடன் என்பது சிறப்பு மேற்பார்வையின் கீழ் வரும் என்றும் கூறியுள்ளார்.

இரண்டு நோக்கங்கள்

இரண்டு நோக்கங்கள்

மறுசீரமைப்பிற்குத் திட்டமிடும் போது அரசாங்கம் இரண்டு நோக்கங்களைக் கொண்டது என்றும் அவை வங்கிகள் எவ்வளவு தொகையினைப் பெறுகின்றன மற்றும் பொதுத் துறை வங்கிகள் தங்களது தரத்தினை மெருகேற்ற எவ்வாறு நடவடிக்கை எடுக்க இருக்கின்றன என்பது என அருண் ஜேட்லி கூறியுள்ளார்.

விலை நிர்ணயம்

விலை நிர்ணயம்

விலை நிர்ணயம் பற்றிக் கேட்டபோது, இது மூன்று மாத கால அரசாங்க செலவினங்களின் விலையாக இருக்கும் என்று தெரியவந்துள்ளது. "வங்கிகளுக்குக் கடன் வழங்குவதில் எந்த நிதியியல் தாக்கமும் இல்லை. இவை இடமாற்று பரிமாற்றங்களாகவும், பண நடுநிலை வகையாகவும் இருக்கும், பொது விவகாரத்திற்கும் இதற்கும் எந்தச் சமந்தமும் இருக்காது தெரிவித்துள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Government Unveils Details Of Bank Recapitalisation Plan of Rs 88,139 crore

Government Unveils Details Of Bank Recapitalisation Plan of Rs 88,139 crore
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X