இந்தியாவின் மிகப் பெரிய தனியார் விமானப் போக்குவரத்து நிறுவனமான ஜெட்ஏர்வேஸ் குறிப்பிட்ட வழித்தடங்களில் மட்டும் உள்நாட்டுப் பயணங்களுக்கு 20 சதவீதம் வரையிலும், வெளிநாட்டுப் பயணங்களுக்கு 30 சதவீதம் வரையிலும் டிக்கெட் கட்டண சலுகையினை அறிவித்துள்ளது.
ஜெட்ஏவேஸ் நிறுவனம் வழங்கும் இந்தச் சலுகையானது குடியரசு தினத்தினை முன்னிட்டு வழங்கப்படும் சிறப்புச் சலுகை எனத் தெரிவித்துள்ளனர்.
சலுகை காலம்
வெளிநாட்டு விமானப் பயணங்கள் சலுகை விலையில் புதன் கிழமை முதல் கிடைக்கும் என்றும் உள்நாட்டு விமானப் பயணங்கள் சலுகையில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் தான் கிடைக்கும் என்றும் அறிவித்துள்ளனர். அதே நேரம் 2018 ஜனவரி 29-க்குள் டிக்கெட்களை முன்பதிவு செய்ய வேண்டும்.
வெளிநாட்டுப் பயணங்கள்
வெளிநாட்டுப் பயணங்களுக்கான 30 சதவீத சலுகை எக்கானமி மற்றும் பிரீமியர் வகுப்பு என அபுதாபி, லண்டன், ஆம்ஸ்டர்டாம், பாரிஸ், டொராண்டோ, மற்றும் பிற வழித்தடங்களில் கிடைக்கும்.
உள்நாட்டு விமானப் பயணம்
உள்நாட்டு விமானப் பயணம் செய்யும் போது எக்கானமி வகுப்பிற்கு 10 சதவீத சலுகையும், பிரீமியர் வகுப்பிற்கு 20 சதவீத கட்டண சலுகையும் அளிக்கப்படும்.
குறிப்பு
முதலில் வருபவர்களுக்கு மட்டுமே ஜெட் ஏர்வேஸ் அளிக்கும் சலுகைகள் கிடைக்கும். நேரடி விமானங்களில் மட்டும் தான் சலுகைகள் அளிக்கப்படும். உள்நாட்டு விமானப் பயணங்களுக்கு ஒரு வழிப் பயணத்திற்கு மட்டும் தான் சலுகை. வெளிநாட்டுப் பயணங்களின் போது செல்வது மட்டும் இல்லாமல் திரும்ப வரும் பயணங்களுக்குச் சலுகை கிடைக்கும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications