டாவோஸ்: உலகப் பொருளாதார மாநாட்டில் தனது உரையினை நிகழ்த்துவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு பிரதமை மோடி இந்திய மற்றும் சர்வதேச நிறுவனங்களுடனான கூட்டத்தில் பங்கேற்றார்.
அந்தக் கூட்டத்தில் என்ன நடந்தது என்ற முக்கிய அம்சங்கள் குறித்துத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளம் உங்களுக்காக இங்கு அளிக்கிறது.
காத்திருந்த தலைமை நிர்வாக அதிகாரிகள்
பிதரமர் மோடி 11:15 மணியளவில் பேச திட்டமிட்டிருந்த நிலையில் சில தலைமை நிர்வாக அதிகாரிகள் கூட்டத்திற்கான கதவு 10:15 மணியளவில் தான் திறக்கப்படும் என்றாலும் 9:30 மணி முதல் அவருக்காகக் கூட்டம் நடைபெற இருக்கும் இடத்தில் காத்துக்கிடந்தனர்.
நீண்ட நேர பேச்சு
பிரதமர் மோடியின் உரையைப் பற்றித் தலைமை நிர்வாக அதிகாரிகளிடம் கருத்து கேட்ட போது அனைவரும் பாராட்டுக்களைத் தெரிவித்தனர். ஆனால் தனிப்பட்ட முறையில் பலர் இந்திய பாரம்பரியம் குறித்து ஏற்கனவே மோடி கூறியிருப்பதை இந்த முறை தவிர்த்து இருக்கலாம் என்று கூறினர்.
இந்தி அல்லது ஆங்கிலம்
பிரதமர் மோடி சர்வதேச ஊடகங்களுக்காக ஆங்கிலத்தில் பேச முடிவு செய்து இருந்த போதிலும் சென்ற ஆண்டு எப்படிச் சீன அதிபர் எப்படிச் சீன மொழியில் பேசினாரோ அதே போன்று இந்தியில் பேசுங்கள் என்று ஆலோசனை வழங்கியதன் பேரில் இந்தியில் உரையாற்றினார்.
மோடி அவர்கள் தனது உரையினை இந்தியில் துவங்கிய சில நொடிகளில் மாநாட்டில் பங்கேற்ற முக்கியத் தலைவர்கள் அனைவரும் ஹெட்போன் மூலமாக ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பைக் கேட்க துவங்கினர்.
முகேஷ் அம்பானியை சந்தித்த லக்ஷிமி மிட்டல்
மோடியின் உரைக்குப் பிறகு எஸ்பிஐ தலைவர் ரஞிஷ் குமார் மற்றும் ஐசிஐசிஐ வங்கி தலைவர் சந்தா கோச்சர் இருவரும் லக்ஷி மிட்டல் உடன் பேசிக்கொண்டு இருந்தனர். சில நிமிடங்களுக்குப் பிற முகேஷ் அம்பானியும், லக்ஷ்மி மிட்டல் இருவரும் ஒன்றாக இருந்தனர்.
கனடியை பிரதமருடன் சந்திப்பு
உலகப் பொருளாதார மாநாட்டில் தனது உரையினை முடித்த உடன் அடுத்த மாதம் இந்தியா வர இருக்கும் கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ருதியேவை மோடி சந்தித்துப் பேசினார். பின்னர்ப் புகைப்படம் எடுப்பது என 30 நிமிடங்கள் செல்ல 100க்கும் மேற்பட்ட தலைமை நிர்வாக அதிகாரிகள் அனைவரும் மோடியுடனான மதிய உணவுக்காகவும் பேச்சுவார்த்தைக்காகவும் 30 நிமிடங்களுக்கு அதிகமாகப் பொறுமையுடன் காத்திருந்தனர்.
சிரிப்பு
தலைமை செயல் அதிகாரிகளுடனான கூட்டத்திற்கு வந்த போது ஒருவர் முகத்திலும் சிரிப்பு இல்லை. ஆனால் புகைப்படங்கள் எடுத்த உடன் பிரதமர் மோடி ஏன் யார் முகத்திலும் சிரிப்பு இல்லை என்று கேட்டார்.
பட்ஜேட் எப்படிப் பட்டதாக இருக்கும்?
இப்போது நீங்கள் எல்லோருமே என்னுடன் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள், ஆனால் 2018-2019 பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டபின் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று பார்ப்போம்" என்றார். இதை வைத்துப் பார்க்கும் போது இது பெருநிறுவனங்களுக்குக் கடுமையான பட்ஜெட் என்று சுட்டிக்காட்டிவா? என்ற குழப்பங்கள் எழுந்தது.
பிரதமர் மோடி
இந்தியாவை முந்திய சீனாவும், பாகிஸ்தானும்..!
பட்ஜெட்க்கு பின் பெட்ரோல், டீசல் விலை குறையும்..!
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications