யூடியூப்-கிற்கு இணையான சேவை கட்டண முறையில் வழங்கி வரும் நெட்பிளிக்ஸ் இன்றைய இளைஞர்கள் மத்தியில் மிகவும் விருப்பமான ஒரு பொழுதுபோக்குத் தளமாக மாறி வருகிறது.
இளைஞர்கள் மத்தியில் ஆதிக்கம் நிறைந்து விளங்கும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் திங்கட்கிழமை வர்த்தகத்தில் 100 பில்லியன் டாலர் சந்தை மூலதன அளவை அடைந்துள்ளது.
வெற்றி
சமீபத்தில் நெட்பிளிக்ஸ் வெளியிட்ட ஸ்டிரேஞ்சர் திங்ஸ், பிரைட் மற்றும் தி கிரவுன் ஆகியவை மக்கள் மத்தியில் பெரிய அளவிலான வெற்றி அடைந்த நிலையில் இந்நிறுவனத்தில் உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
வாடிக்கையாளர்கள்
இதனைத் தொடர்ந்து இந்நிறுவனத்தின் மதிப்புத் திங்கட்கிழமை வர்த்தகச் சந்தையில் சுமார் 100 பில்லியன் டாலரை முதல் முறையாக எட்டியது. டிசம்பர் காலாண்டில் மட்டும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் சுமார் 8.33 மில்லியன் வாடிக்கையாளர்களைச் சேர்த்துள்ள குறிப்பிடத்தக்கது.
100 பில்லியன் டாலர்
இதன் மூலம் அமெரிக்கப் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நெட்பிளிக்ஸ் நிறுவனப் பங்குகள் திங்கட்கிழமை வர்த்தகத்தில் 227.79 டாலர் அளவை எட்டி 100 பில்லியன் டாலர் சந்தை மூலதன அளவை முதல் முறையாக அடைந்துள்ளது.
எதிர்பார்ப்பு
இந்நிலையில் 2018ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் புதிதாக 6.35 மில்லியன் வாடிக்கையாளர்களை எதிர்பார்ப்பதாகவும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.
போட்டி
இதே வளர்ச்சி தொடர்ந்தால், நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஆப்பிள், பேஸ்புக் போன்ற முன்னணி நிறுவனங்களும் அடுத்தச் சில வருடத்தில் கடுமையான போட்டியை உருவாக்கும் எனவும் கூறப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications