இந்தியாவின் மிகப்பெரிய பேமெண்ட் சேவை அளிக்கும் நிறுவனங்களில் ஒன்றான பேடிஎம், சேவை விரிவாக்கத்திற்காகவும், புதிய சேவைகளுக்காகவும் பல வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து முதலீட்டை ஈர்த்து வருகிறது.
புதிய முதலீட்டாளர்
இந்நிலையில் புதிய முதலீட்டைப் பெற முதலீட்டாளர்களுக்குப் பங்கு முதலீடு செய்ய முடிவு செய்யப்பட்டது. பல்வேறு ஆலோசனைக்குப் பிறகு தற்போது இருக்கும் முதலீட்டாளர்களை இழக்க வேண்டாம் என்றும் புதிய முதலீட்டாளர்களுக்கு ஊழியர்களிடம் இருக்கும் பங்குகளை அளிக்க முடிவு எடுக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் பேடிஎம் ஊழியர்கள் சுமார் 50 மில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை விற்க முடிவு செய்துள்ளனர்.
டிஸ்கவரி கேபிட்டல்
அடுத்தச் சில வாரங்களில் நடைபெறும் இந்தப் பங்கு விற்பனையில் மூலம் பேடிஎம் முதலீட்டாளர்கள் பட்டியலில் டிஸ்கவரி கேபிட்டல் இணைய உள்ளது. இந்த முறை மேலும் சில முதலீட்டாளர்களும் வர வாய்ப்பு உள்ளதாகவும் பேடிஎம் நிறுவன ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
10 பில்லியன் டாலர்
புதிய முதலீட்டாளர்களுக்கான பங்கு விற்பனை முடியும் நிலையில் இந்நிறுவனத்தின் மொத்த பங்கு மதிப்பு சுமார் 10 பில்லியன் டாலர் என்ற உயரிய அளவை அடையும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிறுவனம் சீனாவின் அலிபாபா மற்றும் ஜப்பானின் சாப்ட்பேங்க் ஆகிய இரு நிறுவனங்களின் அதீத முதலீட்டில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
சாப்ட்பேங்க்
அலிபாபா இந்நிறுவனத்தின் ஆரம்பக் கட்டத்திலேயே முதலீடு செய்திருந்த நிலையில், கடந்த வருடம் மே மாதம் பேடிஎம் நிறுவனத்தில் 1.4 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டைச் செய்தது. இப்போது இந்நிறுவனத்தின் மொத்த மதிப்பு 7 பில்லியன் டாலர்.
மத்திய அரசு
2016ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மத்திய அரசு அறிவித்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் மீதான தடை காலத்தில் பேடிஎம் நாட்டின் அனைத்து வர்த்தகப் பகுதிகளிலும் விரிவாக்கம் செய்து மிகப்பெரிய அளவில் வளர்ந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications