டெல்லி: மூன்று வருடத்திற்கு முன்பு டெல்லியில் பெட்ரோல் விலை 72.43 ரூபாய் ஒரு லிட்டர் என்று விற்கப்பட்டதே அதிகம் என்று கூறிவந்த நிலையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 72.51 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 80.30 ரூபாய் என்றும், கொல்கத்தாவில் 75.13 ரூபாய் லிட்டர் என்றும் விற்கப்பட்டு வருகிறது.
சென்னையில் பெட்ரோல் விலை நிலவரம்
இதே போன்று சென்னையில் பெட்ரொல் விலை 2013-ம் ஆண்டு அதிகபட்சமாக 79.55 ரூபாய் லிட்டர் என விற்கப்பட்ட நிலையில் தற்போது 75.12 ஒரு லிட்டர் என்று விலை உயர்ந்துள்ளது.
கொல்கத்தாவில் 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 75.46 ரூபாய் என்றும், மும்பையில் 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 80.60 ரூபாய் என்றும், சென்னையில் 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 75.78 ரூபாய் ஒரு லிட்டர் பெட்ரோல் என்றும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
டீசல்
பெட்ரோல் விலையினைப் போன்று டீசல் விலையும் புதன்கிழமை உயர்ந்தே காணப்பட்டது. டெல்லியில் 63.38 ரூபாய், கொல்கத்தாவில் 66.04 ரூபாய், மும்பையில் 67.50 ரூபாய் மற்றும் சென்னையில் 66.84 ரூபாய் என லிட்டர் ஒன்றுக்கு டீச்ல விலை உயர்ந்து இருந்தது.
கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் உற்பத்தி விலையினை உயர்த்தி வருவதே இதற்கான முக்கியக் காரணம் ஆகும். இன்று உலகச் சந்தியினைப் பொருத்த வரையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் 69.96 டாலர்கள் ஒரு பேரல் என்றும் WTI கச்சா எண்ணெய் 64.47 டாலர் ஒரு பேரல் என்றும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தினமும் விலை உயரும் பெட்ரோல்
தினமும் பெட்ரோல் விலை மாற்றி அமைத்து வருவதால் விலை உயர்வானது பெரிய அளவிற்குத் தெரியாமல் இருக்கிறது. இதுவே சென்ற வருடம் வரை 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரொல் டீசல் விலை மாற்றி அமைக்கப்பட்டு வந்தது.
ஜிஎஸ்டி
மறுபக்கம் ஜிஎஸ்டி கீழ் பெட்ரோல், டீசல் விலை கொண்டு வராமல் மாநிலங்கள் விதித்துள்ள வரி, கலால் வரி போன்றவற்றால் பெட்ரோல் விலை 50 ரூபாய்க்கும் கூடுதலான விலைக்கு விற்கப்பட்டு வருகிறது.
More From GoodReturns

பெட்ரோல், டீசல் விலை குறையாது..? மத்திய அரசின் 10 ரூபாய் விலை குறைப்பு பின் இருக்கும் உண்மை..!!

பேருந்து டிக்கெட் கட்டணங்கள் குறைப்பு: எரிபொருளை சேமிக்க பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுரை!!

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுமா? மதிப்பாய்வு முறையை மாற்றிய அரசு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

பெட்ரோல், டீசல் விலை குறையுமா? அதிரடியாக வரியை குறைத்த மத்திய அரசு!! வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!!

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: மத்திய அரசு கடும் எச்சரிக்கை!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications