இண்டர்கிளோப் ஏவியேஷன் நிறுவனம் இந்தியாவில் இண்டிகோ என்ற பட்ஜெட் விமானப் போக்குவரத்துச் சேவையினை வழங்கி வருகிறது. நடப்பு நிதி ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 56 சதவீதம் நிகர லாபம் அடைந்துள்ளதாக நேற்று மூன்றாம் காலாண்டு அறிக்கை வெளியீட்டின் போது அறிவித்துள்ளது.
அது மட்டும் இல்லாமல் சர்வதேச விமானப் பயணச் சேவையில் நீண்ட தூர சேவையினை அளிப்பதற்கான பணிகளில் இறங்கியுள்ளது.
காலாண்டு லாபம் எவ்வளவு?
டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாம் காலாண்டில் இண்டிகோ நிறுவனம் 762 கோடி ரூபாய் நிகர லாபம் அடைந்துள்ளது. சென்ற ஆண்டு இதே காலாண்டில் 487.25 கோடி ரூபாய் நிகர லாபம் அடைந்து இருந்ததாக இண்டிகோ நிறுவனம் அறிவித்து இருந்தது.
வருவாய்
இண்டிகோ நிறுவனத்தின் வருவாயானது 25 சதவீதம் உயர்ந்து 6,449.79 கோடி ரூபாயினைப் பெற்றுள்ள நிலையில் சென்ற ஆண்டு 5,158.42 கோடி ரூபாய் வருவாயினை இண்டிகோ பெற்று இருந்தது.
எரிபொருள் செலவு
சென்ற ஆண்டு வரை 20.6 சதவீதம் வரை எரிபொருளுக்குச் செலவௌ செய்து வந்த இண்டிகோ நிறுவனம் இந்த ஆண்டுப் புதிய விமானங்கள் அறிமுகம் செய்தது மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வால் 30 முதல் 40 சதவீதம் வரை கூடுதல் செலவாகியுள்ளது.
இண்டிகோ
உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் 153 விமானங்கள் மற்றும் தினம் 1,000 பயணங்கள் என 39.6 சதவீத சந்தையினை இண்டிகோ நிறுவனம் தன் வசம் வைத்துள்ளது.
பங்குகள்
இண்டர்குளோப் ஏவியேஷன் நிறுவனப் பங்குகள் நேற்று 0.60 சதவீதம் என 7.45 புள்ளிகள் உயர்ந்து 1,245.35 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டது.


Click it and Unblock the Notifications