இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமாகத் திகழும் மாருதி சுசூகி நிறுவனம் டிசம்பர் மாதத்துடன் முடிந்த காலாண்டில் கணிப்புகளை விடவும் குறைவான அளவில் லாப உயர்வை அடைந்து முதலீட்டாளர்களைச் சோகத்தில் ஆழ்த்தியது.
இதனால் திங்கட்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையில் இந்நிறுவனப் பங்குகள் சரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை குடியரசு தினத்தை முன்னிட்டு விடுமுறை.
லாபம்
31 டிசம்பர் 2017 உடன் முடிந்த காலாண்டில் மாருதி சுசூகி நிறுவனம் 1,799 கோடி ரூபாய் அளவிலான லாபத்தை மட்டுமே பெற்றுள்ளது, கடந்த வருடத்தின் அதே காலகட்டத்தை ஒப்பிடும் போது இது வெறும் 3 சதவீதம் மட்டுமே உயர்வானதாகும்.
லாபத்தில் ஏற்பட்ட இந்தச் சரிவிற்கு முக்கியக் காரணமாக வரியில் மாற்றங்களே முக்கியமான காரணமாகக் கூறப்படுகிறது.
சந்தைக் கணிப்புகள்
இக்காலாண்டில் மாருதி சுசூகி குறைந்தபட்சம் 2,000 கோடி ரூபாய் அளவில் லாபத்தைப் பெறும் எனக் கணிக்கப்பட்டு இருந்த நிலையில் முதலீட்டாளர்களுக்கு வருத்தமான செய்தியை அளித்துள்ளது.
வருவாய்
டிசம்பர் காலாண்டில் மாருதி சுசூகி சுமார் 19,283.2 கோடி ரூபாய் அளவிலான வருவாயைப் பெற்றுள்ளது. இது கடந்த நிதியாண்டை விடவும் 14 சதவீதம் அதிகமாகும்.
பங்கு மதிப்பு
இன்றைய வர்த்தக முடிவில் மாருதி சுசூகி நிறுவனத்தின் பங்கு மதிப்பு 1.60 சதவீதம் வரையில் சரிந்து 9277.20 ரூபாய் அளவில் இன்றைய வர்த்தகம் முடிவடைந்துள்ளது.
முழு அறிக்கை
மாருதி சுசூகி நிறுவனத்தின் முழுமையான காலாண்டு முடிவுகள்.


Click it and Unblock the Notifications