முன்னால் ஆரிபிஐ கவர்னர் தற்போது உள்ள நாணய கொள்கை குழுவை புகழ்ந்துள்ளார். ஆர்பிஐ கவர்னராக இவர் இருந்த போது ரெப்போ வட்டி விகிதத்தினை இவர் குறைக்கவில்லை என்ற காரணத்திற்காகப் பெரிதும் விமர்சிக்கப்பட்டார்.
வெளிநாட்டுத் தொலைக்காட்சி ஒன்றுக்கு உலகப் பொருளாதார மாநாட்டில் பங்கேற்ற ரகுராம் ராஜன் உர்ஜித் தலைமையிலான 6 நபர்கள் கொண்ட நாணய கொள்கை குழு பணவீக்கத்தினை எதிர்த்துச் சிறப்பாகச் செயல்படுவதாகக் கூறியுள்ளார்.
ரெப்போ விகிதம்
பண வீக்கம் ஒரு பக்கம் இருக்கும் பட்சத்திலும் பிப்ரவரி மாதம் 7ம் தேதி நடைபெற இருக்கும் நாணய கொள்கை கூட்டத்தில் உர்ஜித் பட்டேல் ரெப்போ வட்டி விகிதத்தினைக் குறைக்கமாட்டர் என்று வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.
விலை இலக்குகள்
அதிகப் பணவீக்க அழுத்தங்களால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு விலை இலக்குகள் பயனுள்ளதாக உள்ளன என்று ரகுராம் ராஜன் கூறியுள்ளார். ஆர்பிஐ கவர்னாராக இருந்த போதே இதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டுத் தற்போது தான் செயல்பாட்டிற்கு வருகிறது.
வரா கடன்
நாணய கொள்கை குழுவைத் தவிர்த்து 210 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான வரா கடனை திரும்பப் பெறுவதற்கான முக்கியக் காரணியாகவும் ரகுராம் ராஜன் செயல்பட்டதாகவும் ஆர்பிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
2018-ம் ஆண்டு வரா கடனில் மிகப் பெரிய முன்னேற்றத்தினை அடைந்த அதிக அளவிலான கடன் வசூலிக்கப்படும் என்று எஸ்பிஐ வங்கி தலைவரான ரஜினிஷ் குமார் கூறியுள்ளார்.
புதிய வங்கி திவால் சட்டம்
மோசமான நிலை தற்போது இல்லை என்று அரசு வெகு சீக்கிரமாகக் கூறி வருகிறது, ஆனால் அரசு கொண்டு வர உள்ள புதிய வங்கி திவால் சட்டம் போன்றவை வங்கிகள் மற்றும் நிறுவனங்களுக்குப் புத்துயிர் அளிக்கும் என்றும் ராஜன் கூறியுள்ளார்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications