இந்தியாவின் நட்புறவை உலகின் அனைத்து நாடுகளுடனும் மேம்படுத்தவும், புதிய வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஈர்க்கும் வண்ணமாகப் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நாடுகளுக்குச் சென்று வருகிறார்.
இந்நிலையில் 2018-19ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் வெளியிடும் பிப்ரவரி மாதத்தில் பிரதமர் மோடி 3 நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
பிப்ரவரி 9-12
பிப்ரவரி மாதம் 9-12ஆம் தேதிகளில் மோடி பாலஸ்தீனம், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
கிழக்குப் பகுதியில் முக்கியமான நாடுகளுக்குச் சென்று முடித்துவிட்ட நிலையில் தற்போது மேற்கு பகுதிகளைக் கவணிக்க முடிவு செய்துள்ளார் மோடி.
முதல் இந்திய பிரதமர்
பாலஸ்தீனம் செல்லும் முதல் இந்திய பிரதமராக மோடி திகழ்கிறார், அதைத் தொடர்ந்து ஒமன் நாட்டிற்கு முதல் முறையாகவும், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு 2வது முறையாகவும் மோடி தனது பயணத்தைத் திட்டமிட்டுள்ளார்.
பிரச்சனை
ஜனவரி 17ஆம் தேதி இஸ்ரேல் பிரதமர் இந்தியாவிற்கு வந்திருக்கும் நிலையில், உலக நாடுகள் மத்தியில் வெளியுறவுக் கொள்கைகளை அனைத்து நாடுகளுக்குச் சாதகமாக இருக்கும் வகையில் தற்போது பாலஸ்தீனம் செல்ல முடிவு செய்துள்ளார் மோடி. தற்போது இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையிலான பிரச்சனை பெரிய அளவில் வெடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
விருந்தினர்
துபாயின் நடக்கும் 6வது உலக அரசு கூட்டம் நடைபெற உள்ளது இதில் பிரதமர் விருந்தினராக அழைக்கப்பெற்றுள்ளார். இக்கூட்டத்தில் மோடி கலந்துகொள்ள உள்ளார், இதைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாடுகளில் இருக்கும் இந்திய அமைப்புகளையும் சந்திக்க உள்ளார் மோடி.
இந்தியாவிற்கு வருகை
இம்மாதத்தின் கடைசியில் ஜோர்டன் நாட்டின் அரசர், மார்ச் மாதத்தில் சவுதி அரேபியாவின் அரசரும், ஈரான் நாட்டின் அதிபரும் இந்தியாவிற்கு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications