ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்புக்குப் பின் இந்தியாவில் வகைப்படுத்தப்படாத துறையில் வேலைவாய்ப்பு எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளது. வகைப்படுத்தப்பட்ட துறையில் அதிக வேலைவாய்ப்புகளை அளிக்கும் ஐடி மற்றும் வங்கி துறையும் 2017-18ஆம் நிதியாண்டில் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த நிலையில் இந்திய வேலைவாய்ப்பு சந்தை முடங்கிப்போனது.
தனிப்பட்ட கவனம்
மத்திய அரசு இந்தியாவில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், தற்போது இருக்கும் வேலைவாய்ப்புகளைத் தக்கவைத்துக்கொள்ளவும் புதிய திட்டத்தை அறிவித்துத் தனிப்பட்ட கவனத்தைச் செலுத்த உள்ளது.
பொருளாதார ஆய்வறிக்கை
ஜன.29 வெளியான பொருளாதார ஆய்வறிக்கையில் இதுகுறித்து மத்திய அரசு தனது திட்டம் குறித்து விளக்கியுள்ளது.
இந்தியாவில் தற்போது இருக்கும் வேலைவாய்ப்பு பற்றாக்குறையை இத்திட்டம் கண்டிப்பாகத் தீர்க்கும் எனவும் மத்திய அரசு நம்புகிறது.
3 இடங்களைக் கவனிக்கும் திட்டம்
இப்புதிய திட்டம் நீண்ட கால நோக்கத்தில் அல்லாமல் குறுகிய காலகட்டத்தை மட்டுமே மையமாகக் கொண்டு இயங்க உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்குத் தகுதியான வேலைவாய்ப்புகளை அளிக்கவும், பல்வேறு துறையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், புதிய வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு முக்கிய இடம் அளிக்கவும் திட்டமிட்டுள்ளதாகப் பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறுகிய கால கவனம்
வேலைவாய்ப்பு சந்தையை போலவே கல்வி மற்றும் விவசாயம் ஆகிய துறை சார்ந்த வளர்ச்சி குறித்து குறுகிய கால அடிப்படையில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளதாகவும் பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறப்புப் பக்கம்
பட்ஜெட் குறித்து அனைத்து முக்கியமான செய்திகளும் தெரிந்துகொள்ளத் தமிழ் குட்ரிட்டன்ஸ்-இன் சிறப்பு பக்கத்தை பாருங்கள்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications