2018-2019 நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டினை முன்னிட்டுப் பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை 2018-ம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வு அறிக்கையினை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அவர்கள் சமர்ப்பிக்க இருக்கிறார்.
நிதி அமைச்சகத்தின் மூத்த பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியம் பொருளாதாரச் சர்வே குறித்து ஒரு இணையதளத்தினைத் துவங்கி அதில் ஆய்வு குறித்துச் சில தகவல்களையும் வெளியிட்டுள்ளார்.
மேலும் பிற்பகல் 1:30 மணிக்கு யூடியூப் மூலமாக லைவ் வீடியோ செய்தியாளர் சந்திப்பு ஒன்றை அரவிந்த் சுப்ரமணியம் நடத்த உள்ளார். இந்தச் சந்திப்பின் போது கடந்த 12 மாதத்தில் இந்திய பொருளாதாரம் எப்படி வளர்ந்துள்ளது என்ற அறிவிப்புகள் வெளியாகும், அது மட்டும் இல்லாமல் நடப்பு அரசின் முக்கியத் திட்டங்கள் எப்படிச் செயல்பட்டன, அரசாங்கத்தின் கொள்கை முன்முயற்சிகளின் சிறப்புப் போன்றவை குறித்தும் விளக்கப்படும்.
பொருளாதார ஆய்வு அறிக்கை
ஜனவரி 29 பிற்பகல் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி 2018-ம் ஆண்டிற்கான பொருளாதார அறிக்கையினை வெளியிடுவார் என்று அரவிந்த் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
ஜிடிபி
2017-2018 நிதி ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி சென்ற ஆண்டு இருந்த 7.1 சதவீத வளர்ச்சியில் இருந்து சரிந்து 7.1 சதவீதமாக இருக்கும் என்று மத்திய புள்ளிவிவரம் அலுவலகம் கூறியுள்ளது.
பண மதிப்பு நீக்கம்
பண மதிப்பு நீக்க நடவடிக்கையினை அடுத்து 15 மாதங்களுக்குப் பிறகு இந்தப் பொருளாதார அறிக்கை வெளியிட இருப்பதால் அதன் செலவுகள் மற்றும் நன்மைகள் பற்றிய பகுப்பாய்வு ஆய்வு குறித்து முக்கிய விவரங்கள் தெரிய வர வாய்ப்புகள் உள்ளது. அது மட்டும் இல்லாமல் 2016 அக்டோபர் மாதம் இருந்தது போல மீண்டும் 95 சதவீத ரொக்க பணப் பரிவர்த்தனை தற்போது நடைபெற்றும் வருகிறது.
சிறப்பம்சங்கள்
பொருளாதார அறிக்கை 2018 சிறப்பம்சங்கள் குறித்துப் பிற்பகல் 1:30 மணிக்கு அரவிந்த் சுப்ரமணியம் செய்தியாளர் சந்திப்பின் போது குறிப்பிடுவார்.
'JAM’
இரண்டு வருடங்களுக்கு முன்பு பொருளாதாரச் சர்வேயில் 'JAM' எனப்படும் ஜன் தன், ஆதார் மற்றும் மொபைல் என்ற சுருக்கம் குறித்து அறிவிப்பை வெளியிட்டனர். இதில் பணம் செலுத்துபவர்களின் திறனைப் பெறாமல் பணத்தை நேரடியாக ஏழை மக்களைக் கைப்பற்ற அனுமதிக்க வேண்டும் என்பதை நோக்கமாக வைத்து உருவாக்கப்பட்டது ஆகும்
ஜிடிபி
வர்த்தகம்
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications