எளிதாக வர்த்தகம் செய்யக்கூடிய நாடுகளில் 30 இடங்களை முன்னேறிய இந்தியா..!
2017-18ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருந்தாலும் எளிதாக வர்த்தகம் செய்யக்கூடிய நாடுகளின் பட்டியலில் இந்திய மிகப்பெரிய அளவில் முன்னேறியுள்ளது.
நடப்பு நிதியாண்டில் உலக வங்கி வெளியிட அறிக்கையில் உலகில் எளிதாக வர்த்தகம் செய்யக்கூடிய நாடுகள் என்ற பட்டியலில் வரலாற்றில் முதல் முறையாக இந்திய டாப் 100 நாடுகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. நடப்பு நிதியாண்டில் மட்டும் இந்தியா சுமார் 30 இடங்கள் முன்னேறியுள்ளது..

ஆனால் அதிக வர்த்தக ஒப்பந்தம் பெறும் நாடுகளில் இந்தியா 172வது இடத்தில் இருந்து 164வது இடத்திற்கு மட்டுமே முன்னேறியுள்ளது.
இதன் மூலம் இந்தியாவில் நிலுவையில் உள்ள திட்டங்களை விரைவாக ஆய்வு செய்து முடிவெடுப்பதன் மூலம் வர்த்தகச் சந்தைக்கு ஏதுவாக அமையும் எனப் பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications