மத்திய அரசு கடந்த நிதியாண்டில் டெக்ஸ்டைல் துறைக்கு நிதியதவி செய்த காரணத்தால் இந்தியாவில் ரெடிமேடு ஆடைகளின் ( Man Made Ready Made Garments) ஏற்றுமதி அளவு சுமார் 16 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது என 2017-18ஆம் நிதியாண்டுக்கான ஆய்வறிக்கை கூறுகிறது.
ஆனால் பிற ஆடைகளின் ஏற்றுமதி அளவில் சிறு தொய்வு காணப்பட்டு, செப்டம்பர் 2017இல் நிலையான அளவை அடைந்துள்ளது.
ஸ்மிருதி இராணி
இந்நிலையில் இந்தியாவில் ஆடை உற்பத்தி மையமாக வைத்து ஒட்டுமொத்த டெக்ஸ்டைல் துறையை ஊக்குவிக்கும் வகையில் 6,000 கோடி ரூபாய் அளவிலான நிதியுதவி அளிக்க உள்ளதாக டெக்ஸ்டைல் துறை அமைச்சரான ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார்.
சிக்கல்கள்
இத்துறைக்கு இந்தியாவில் வளர்ச்சி வாய்ப்புகள் மிகவும் அதிகமாக இருக்கிறது. ஆனாலும் இத்துறை பல்வேறு விதமான சிக்கல்களைச் சந்திக்கிறது. இதனால் இத்துறை நிறுவனங்களின் உற்பத்தி மற்றும் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் அளவுகள் அதிகளவில் குறைந்து வருகிறது.
திவால்
இதே பிரச்சனைகளால் இத்துறையில் இருக்கும் சிறு நிறுவனங்கள் பல நேரங்களில் திவாலாகும் நிலைக்குக் கூடத் தள்ளப்படுகிறது.
தற்போது அளிக்கப்படும் நிதியின் மூலம் அடுத்தச் சில வருடங்களில் நிலையான வர்த்தக மற்றும் உற்பத்தி வளர்ச்சியைப் பெறும் என நம்பப்படுகிறது.
சிறப்புப் பக்கம்
பட்ஜெட் குறித்து அனைத்து முக்கியமான செய்திகளும் தெரிந்துகொள்ளத் தமிழ் குட்ரிட்டன்ஸ்-இன் சிறப்பு பக்கத்தை பாருங்கள்.


Click it and Unblock the Notifications