பங்கு சந்தையில் முதலீடு செய்வோருக்கு பட்ஜெட்டில் காத்திருக்கும் அதிர்ச்சி..!

மும்பை: பங்கு சந்தையில் முதலீடு செய்பவர்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக ஒரு பங்கை நிர்வகித்து வருகிறார் என்றால் அதன் மூலம் வரும் லாபத்திற்கு வரி இல்லை. இதனைப் பார்த்து வரும் ரியல் எஸ்டேட், பிக்சட் டெபாசிட், பாண்டு மற்றும் பிற முக்கியத் திட்டங்களில் முதலீடு செய்பவர்கள் பங்கு சந்தை மூலமாக வரும் லாபம் அல்லது டிவிடண்ட்டுக்கு ஏன் வரி விதிப்பதில்லை என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

2016-ம் ஆண்டு நீண்ட கால ஈக்விட்டி திட்டங்கள் மூலம் வரும் வருவாய் மீது வரி விதிக்கும் எண்ணம் இருந்ததை நரேந்திர மோடி அவர்கள் வெளிப்படுத்தியும் ஏற்கனவே உள்ளார். ஆனால் இது சென்ற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படவில்லை. எனவே வர இருக்கும் 2018-2019 பட்ஜெட் கூட்டத்தில் வரி விதிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இதனால் இந்திய பொருளாதாரம் என்ன ஆகும், தனியார் நிறுவனங்களின் நிலை என்று விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.

பங்கு சந்தை

பங்கு சந்தை

பங்கு சந்தை முதலீடு என்பது எந்த ஒரு நாட்டில் அதிகளவில் நடைபெறுகிறதோ அதே அளவிற்கு அந்த நாட்டின் பொருளாதாரமும் வேகமாக வளர்ச்சி அடையும். அதனால் தான் மத்திய அரசும் மியூச்சுவல் ஃபண்டு போன்ற திட்டங்களில் முதலீடு செய்யும் போது அதனை நாம் தினமும் கண்கானிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அதிகளவில் கடந்த சில ஆண்டுகளாக விளம்பரப்படுத்தியது.

உலகப் பொருளாதார மாநாடு

உலகப் பொருளாதார மாநாடு

உலகப் பொருளாதார மாநாட்டில் சர்வதேச மற்றும் இந்திய தலைமை செயல் அதிகாரிகளுடனான முக்கியச் சந்திப்பில் தற்போது நீங்கள் என்னுடன் மகிழ்ச்சியாகப் பேசிக்கொண்டு இருக்கும் உங்களுக்கு என்னை 2018 பட்ஜெட்டிற்குப் பிறகு பிடிக்குமா என்று பார்ப்போன் என்றும் பொறி வைத்துள்ளார்.

அச்சம்

அச்சம்

இதனை வைத்துப் பார்க்கும் போது ஒருவேலைப் பங்கு சந்தைச் சார்ந்த நீண்ட கால முதலீடுகள் மூலம் பெறப்படும் வருவாய்க்கும் வரி விதிக்கப்பட்டுவிடுமா என்ற அச்சமும் முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

 சென்செக்ஸ்

சென்செக்ஸ்

ஒருவேலை 2018-2019 நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டில் நீண்ட காலப் பங்கு சந்தை முதலீடுகள் வழியாக வரும் வருவாய்க்கு வரி விதிக்கப்பட்டால் தற்போது என்ன தான் மும்பை பங்கு சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 36,000 புள்ளிகளைக் கடந்து சென்றாலும் 2018 டிசம்பர் மாதத்திற்குள் 32,000 புள்ளிகளுக்கும் கீழாகச் சரிய வாய்ப்புகள் அதிகம்.

நிப்டி

நிப்டி

மறுபுறம் குறிப்பிட்ட சில நிறுவனங்களின் பங்குகளால் மிகப் பெரிய உச்சத்தினைத் தொட்டு 11,000 புள்ளிகளைக் கடந்து வர்த்தகம் செய்யப்பட்டு வரும் தேசிய பங்கு சந்தை குறியீடு நிப்டி 10,000 புள்ளிகளுக்கும் கீழாகச் சரிந்து விட வாய்ப்புகள் உள்ளது.

மியூச்சுவல் ஃபண்டு

மியூச்சுவல் ஃபண்டு

மத்திய அரசு எடுத்த பல்வேறு முயற்சிகளின் மூலமாக இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்டு முதலீடு என்பது கடந்த சில ஆண்டுகளாக வேகமாக வளர்ந்தது. அதற்கு நிகராக இந்திய பங்கு சந்தைக் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிப்டி இரண்டும் மிகப் பெரிய உச்சத்தினைத் தொட்டது.

 இன்றைய பங்கு சந்தை நிலவரம்

இன்றைய பங்கு சந்தை நிலவரம்

அமெரிக்க மத்திய வங்கியாகத் திகழும் பெடரல் ரிசர்வ் தனது நாணய கொள்கை கூட்டத்தை ஜனவரி 30-31ஆம் தேதிகளில் நடத்துகிறது. இக்கூட்டத்தில் பெடரல் நிர்வாகம் வட்டி விகிதத்தை உயர்த்த அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளதாகக் கணிப்புகள் வெளியாகியுள்ளது.

இதனால் இந்தியா மட்டும் இல்லாமல் ஆசிய சந்தை முதல் ஐரோப்பிய சந்தை வரையில் அனைத்து முன்னணி வர்த்தகச் சந்தையும் இன்று சரிவுடனே இருக்கிறது.

 

நியூஸ்லெட்டர்

நியூஸ்லெட்டர்

தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்துடன் எப்போதும் இணைந்திருக்கும் வகையில் தொடர்ந்து முதலீட்டுக்கான டிப்ஸ், வர்த்தகச் சந்தை, பொருளாதாரம், வேலைவாய்ப்பு, ஈகாமர்ஸ், மியூச்சுவல் பண்ட் போன்ற அனைத்து விதிமானச் செய்திகளை நியூஸ்லெட்டர் வாயிலாகப் பெறலாம்.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+