டிவிஎஸ் மோட்டார்ஸ் மூன்றாம் காலாண்டு அறிக்கை.. லாபத்தில் 16% உயர்வு..!
டிவிஎஸ் மொட்டார் நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட மூன்றாம் காலாண்டு அறிக்கையில் 16 சதவீதத்திற்கும் கூடுதலாக லாபம் உயர்ந்துள்ளதாக அறிவித்துள்ளது.
டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிவடைந்த மூன்றாம் காலாண்டில் சென்ற ஆண்டுப் பெற்ற 133 கோடி ரூபாய் நிகர லாபத்தினை விட 16.3 அதிகமாக என நடப்பு நிதி ஆண்டில் 154.35 கோடி ரூபாயினைப் பெற்றுள்ளது.

உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதி என டிவிஎஸ் நிறுவனம் இரண்டு சக்கர வாகன விற்பனையில் 13.8 சதவீத வளர்ச்சியுடன் 7,99,000 வாகனங்களை விற்றுள்ளது. மேலும் 3,14,000 மோட்டார் சைக்கிள்களை விற்றுள்ளது.
பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
இன்றைய பங்கு சந்தை நேர முடிவில் டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் பங்குகள் 0.94 சதவீதம் என 6.80 சதவீதம் சரிந்து 712.90 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications