மத்திய பட்ஜெட்டைப் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்கள்..!

இது பட்ஜெட் நேரம் என்பதால் நாம் திரும்பம் பக்கம் எல்லாம் பட்ஜெட் பற்றிய செய்திகளாகவே உள்ளது, அதிலும் பத்திரிக்கைகள், சமூக வலைத்தளங்கள் அதன் ஆதிக்கம் சற்று அதிகமாகவே உள்ளது என்று சொல்லலாம்.

நாம் இது வரை பட்ஜெட் பற்றிய பல்வேறு செய்திகளைப் படித்திருப்போம். ஒரு மாறுதலுக்காக இங்கே மத்திய பட்ஜெட் பற்றிய சில சுவாரசியமான உண்மைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள உள்ளோம்.

முதல் பட்ஜெட்

முதல் பட்ஜெட்

மத்திய பட்ஜெட்டை வழங்கிய முதல் பிரதமர் திரு பண்டிட் ஜவஹர்லால் நேரு ஆவார். இவர் 1958-59ல் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

 கருப்புப் பட்ஜெட்

கருப்புப் பட்ஜெட்

1973-74 ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் கருப்புப் பட்ஜெட் என அழைக்கப்படுகின்றது. ஏனெனில் இந்தப் பட்ஜெட்டில் நிதி பற்றாக்குறையானது 550 கோடி ரூபாயாக உயர்ந்தது.

முதல் இந்திய கவர்னர்

முதல் இந்திய கவர்னர்

டி.டி. தேஷ்முக் இந்திய ரிசர்வ் வங்கியின் முதல் இந்திய கவர்னர் ஆவார். இவர் 1951-52ம் ஆண்டுக்கான இடைக்காலப் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

நேரு குடும்பம்

நேரு குடும்பம்

ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆகிய மூவர் மற்றுமே மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த பிரத மந்திரி ஆவார்கள்.

 முதல் இடைக்காலப் பட்ஜெட்

முதல் இடைக்காலப் பட்ஜெட்

இந்தியாவின் முதல் இடைக்காலப் பட்ஜெட் ஆர்.கே.சண்முகம் செட்டி அவர்களால் தாக்கல் செய்யப்பட்டது.

 கனவு பட்ஜெட்

கனவு பட்ஜெட்

திரு. பி சிதம்பரம் அவர்களால் 1997-98 ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் கனவு பட்ஜெட் (Dream Budget) என அழைக்கப்படுகின்றது.

ஏப்ரல் 1

ஏப்ரல் 1

மத்திய பட்ஜெட் தற்போது பிப்ரவரி 1ஆம் தேதியே தாக்கல் செய்யப்பட்டாலும் இவ்வறிக்கையில் அறிவிக்கப்பட்ட அனைத்தும் ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும்.

மொரார்ஜி தேசாய்

மொரார்ஜி தேசாய்

இந்திய பட்ஜெட்டை அதிக முறை தாக்கல் செய்தவர் திரு மொரார்ஜி தேசாய் ஆவார். அவர் இதுவரை சுமார் 10 முறை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். அவர் முதல் முறை பிரதம மந்திரி மற்றும் நிதி அமைச்சராக இருந்த பொழுது, 5 முழுமையான பட்ஜெட் மற்றும் ஒரு இடைக்காலப் பட்ஜெட்டும், இரண்டாம் முறை பிரதம மந்திரி மற்றும் நிதி அமைச்சராக இருந்த பொழுது மூன்று முழுமையான பட்ஜெட் மற்றும் ஒரு இடைக்காலப் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.

பிப்ரவரி 29

பிப்ரவரி 29

மொரார்ஜி தேசாய் மட்டுமே தனது பிறந்த நாளில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். அவர் இரண்டு முறை அதாவது 1964 மற்றும் 1968 இல் பிப்ரவரி 29 அன்று தனது பிறந்த நாளில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.

லோக் சபா

லோக் சபா

மத்திய பட்ஜெட் எப்போதுமே லோக் சபாவில் தாக்கல் செய்யப்படுகின்றது.

இந்திரா காந்தி

இந்திரா காந்தி

இந்தியாவில் நிதி அமைச்சராக இருந்த ஒரே பெண்மணி திருமதி இந்திரா காந்தி ஆவார். இவர் இந்தியாவின் நிதி அமைச்சராக 1970 முதல் 1971 வரை பதவி வகித்தார்.

28 நிதியமைச்சர்கள்

28 நிதியமைச்சர்கள்

இந்தியா சுதந்திரம் அடைந்த 1947 ல் இருந்து தற்பொழுது வரை 28 நிதி அமைச்சர்களைச் சந்தித்துள்ளது.

லியாகத் அலி கான்
ஆர்.கே.சண்முக செட்டி
ஜான் மத்தாய்
சி. டி. தேஷ்முக்
டி. டி. கிருஷ்ணமாச்சாரி
ஜவஹர்லால் நேரு
மொரார்ஜி தேசாய்
சச்சீந்திர சவுத்ரி
மொரார்ஜி தேசாய்
இந்திரா காந்தி
யஷ்வந்த்ராவ் சவான்
சிதம்பரம் சுப்ரமணியம்
ஹரிபாய் எம். படேல்
சரண் சிங்
ஹெமவதி நந்தன் பகுகுணா
ஆர். வெங்கடராமன்
பிரணாப் முகர்ஜி
வி. பி. சிங்
ராஜீவ் காந்தி
என். டி. திவாரி
சங்கர்ராவ் சவான்
மது டண்டவேட்
யஷ்வந்த் சின்ஹா
மன்மோகன் சிங்
ஜஸ்வந்த் சிங்
பி. சிதம்பரம்
I.K. குஜ்ரால்
அருண் ஜேட்லி

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+