லாபத்தில் 32% சரிவு.. ஐசிஐசிஐ வங்கியின் சோகமான நிலை
நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியாகத் திகழும் ஐசிஐசிஐ வங்கி டிசம்பர் காலாண்டின் வருவாய் முடிவுகளை வெளியிட்டுள்ளது. இக்காலாண்டில் சந்தை கணிப்புகளை விடவும் குறைவான லாபத்தைப் பெற்றுள்ளது இதனால் முதலீட்டாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
டிசம்பர் காலாண்டில் ஐசிஐசிஐ வங்கியின் லாப அளவுகள் 32.4 சதவீதம் வரையில் சரிந்து வெறும் 1,650 கோடி ரூபாய் மட்டுமே பெற்றுள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இதன் அளவு 2,442 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்றுள்ளது.

இக்காலக்கட்டத்தில் மொத்த வருமானத்தின் அளவு 7.2 சதவீதம் அதிகரித்து 5,705 கோடி ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.
மேலும் இக்காலகட்டத்தில் ஐசிஐசிஐ வங்கியின் இதர வருமானத்தின் பிரிவில் 900 கோடி ரூபாய் கருவூல சேவைக்கு வருமானமாகப் பெற்றுள்ளது. நாணய பரிமாற்றத்தின் வாயிலாக 82 கோடி ரூபாய் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications