உலகளவில் அதிகச் செல்வம் படைத்த நாடுகளின் பட்டியல் அன்மையில் வெளியாகியுள்ளது. இந்தப் பட்டியலில் அமெரிக்கா முதல் இடம் பிடித்துள்ள நிலையில் இந்தியா டாப் 10 நாடுகளில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது.
உலகளவில் அதிகச் செல்வம் படைத்த நாடுகளில் இந்தியாவிற்கு என்ன இடம் மற்றும் இந்தப் பட்டியலில் உள்ள பிற நாடுகளின் விவரங்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
அமெரிக்கா
2017-ம் ஆண்டு 64,584 பில்லியன் டாலருடன் உலகளவில் அதிகச் செல்வம் படைத்த நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தினைப் பிடித்துள்ளது.
சீனா மற்றும் ஜப்பான்
அமெரிக்காவை தொடர்ந்து 24,803 பில்லியன் டாலர் மதிப்புடன் சீனா இரண்டாம் இடத்தினையும், 19,522 பில்லியன் டாலர் செல்வ மதிப்புடன் ஜப்பான் மூன்றாம் இடத்தினைப் பிடித்துள்ளது.
மொத்த செல்வம் என்பது எப்படிக் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளது?
ஒரு நாட்டில் அல்லது நகரத்தில் வாழும் மக்களின் சொத்து மதிப்பினை மொத்த செல்வம் என்று கணக்கிடப்படுகிறது. இதில் நிலம், வீடு, பணம், பங்கு சந்தை முதலீடுகள், வணிக வட்டி மற்றும் கடன் உள்ளிட்டவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். ஆனால் இந்த அறிக்கையில் அரசு நிதிகள் குறித்து விவரங்களும் அளிக்கப்படவில்லை.
பிற முக்கிய நாடுகள்
ஐக்கிய ராஜியம் 9,919 பில்லியன் டாலர் மதிப்புடன் 4 வது இடத்தினையும், ஜெர்மனி 9,660 பில்லியன் டாலர் மதிப்புடன் 5வது இடத்தினையும், கனடா 6,393 பில்லியன் டாலர் மதிப்புடன் 8வது இடத்தினையும், பிரான்ஸ் 6,649 பில்லியன் டாலருடன் 7 வது இடத்தினையும், ஆஸ்திரேலியா 6,142 பில்லியன் டாலர் மதிப்புடன் 9 வது இடத்தினையும், இத்தாலி 4,276 பில்லியன் டாலர் மதிப்புடன் 10வது இடத்தினை உலகளவில் அதிகச் செல்வம் படைத்த நாடுகளில் பட்டியலில் இடம்பிடித்து இருந்தன.
சிறப்பாகச் செயல் படும் சந்தை இந்தியா
2016-ம் ஆண்டு 6,584 பில்லியன் டாலராக இருந்த இந்தியாவின் செல்வ மதிப்பு 2017-ம் ஆண்டு 25 சதவீத வளர்ச்சியுடன் 8,230 பில்லியன் டாலர்களாக உள்ளது. அது மட்டும் இல்லாமல் இந்த அறிக்கையில் சிறப்பாகச் செயல் படும் சந்தையாக இந்தியா உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தியாவின் செல்வ வளர்ச்சி
இந்தியாவின் செலவ வளர்ச்சி விகிதமானது கடந்த 10 ஆண்டுகளில் அதாவது 2007 முதல் 2017 வரை மட்டும் 160 உயர்வைப் பெற்றுள்ளது. அதாவது 2007-ம் ஆண்டு 3,165 பில்லியன் டாலராக இருந்த செல்வ மதிப்பானது 2017-ம் ஆண்டு 8,230 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
கோடிஸ்வரர்கள்
இந்தியாவில் 3,30,400 நபர்களுக்கும் அதிகமானவர்கள் 1 மில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 9வது இடத்தில் உள்ளனர். இதுவே அமெரிக்காவில் 50,41,400-க்கும் அதிகமானவர்கள் 1 மில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உள்ளதால் முதல் இடத்தினைப் பிடித்துள்ளது.
மல்டி மில்லியனர்கள் பட்டியலில் இந்தியா 20,730 நபர்களுடன் 7வது இடத்தினைப் பிடித்துள்ளது.
நியூஸ்லெட்டர்
தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்துடன் எப்போதும் இணைந்திருக்கும் வகையில் தொடர்ந்து முதலீட்டுக்கான டிப்ஸ், வர்த்தகச் சந்தை, பொருளாதாரம், வேலைவாய்ப்பு, ஈகாமர்ஸ், மியூச்சுவல் பண்ட் போன்ற அனைத்து விதிமானச் செய்திகளை நியூஸ்லெட்டர் வாயிலாகப் பெறலாம்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications