இந்திய பங்குச்சந்தை மீதும், இந்திய சந்தை மீதும் முதலீட்டாளர்களுக்கு அதிகளவிலான நம்பிக்கை வளர்ந்த காரணத்தால் 2017ஆம் ஆண்டின் துவக்கத்தில் இருந்து இந்திய சந்தையில் அதிகளவிலான முதலீடுகள் குவிந்து வருகிறது.
அதிலும் குறிப்பாகச் சென்செக்ஸ் குறியீடு 34,000 புள்ளிகளில் வெகு குறைவான காலத்தில் 36,000 புள்ளிகளைத் தாண்டி வர்த்தகம் செய்து வருகிறது. இந்த வளர்ச்சிக்குக் காரணமாக முதலீட்டாளர்களைச் சோகத்தில் ஆழ்த்தும் வகையில் மத்திய அரசு முக்கியமான ஒரு அறிவிப்பை விதிக்க உள்ளதாகத் தெரிகிறது. இது நிறைவேறும் பட்சத்தில் சென்செக்ஸ் 3000 புள்ளிகள் வரையில் சரிய வாய்ப்புகள் உண்டு.
வளர்ச்சி
கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சென்செக்ஸ் குறியீடு சுமார் 28 சதவீதம் வரையிலான வளர்ச்சியை அடைந்து, உலகச் சந்தைகளில் அதிகப்படியான வளர்ச்சியைச் சந்திக்கும் நாடாக மும்பை பங்குச்சந்தை உருவெடுத்துள்ளது.
உள்நாட்டு முதலீட்டாளர்கள் மட்டும் கடந்த 1 வருடத்தில் 19 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளில் முதலீடு செய்துள்ளனர்.
புதிய வரி
இந்நிலையில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் அறிக்கையில் பங்குகள் மீதான நீண்ட கால முதலீட்டில் கிடைக்கும் லாபத்திற்கு வரி விதிக்கப்போவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளது.
இதனால் இந்திய சந்தையில் நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்கள் தங்களது பங்குகளை உடனடியாக விற்பனை செய்ய வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படும்.
அதுமட்டும் அல்லாமல் அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் முதலீடு செய்வதும் குறைந்து விடும்.
ஒரு வருடம்
தற்போது ஒரு வருடத்திற்கு அதிகமாக நீங்கள் வைத்திருக்கும் பங்குகள் அனைத்தும் நீண்ட கால முதலீடாகக் கருதப்படும். இத்தகைய முதலீட்டின் மூலம் உங்களுக்குக் கிடைக்கும் லாபத்திற்கு நீங்கள் வரி செலுத்த தேவையில்லை.
பிர அனைத்து விதமான முதலீட்டுக்கும் நீங்கள் வரி செலுத்த வேண்டும்.
LTCG tax
15 மாதத்தில் பொதுத் தேர்தல் இருக்கும் நிலையில் long term capital gains (LTCG) tax எனப்படும் புதிய வரியை அறிவிப்பதன் மூலம் மோடி அரசுக்கு வெற்றி வாய்ப்புகள் குறைய அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் இதனை அறிவிக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
கால நீட்டிப்பு
ஏற்கனவே இந்திய சந்தை பல பாதிப்புகளைச் சந்தித்துக்கொண்டு இருக்கும் நிலையில், பங்குச்சந்தையில் முதலீட்டு அளவுகள் மட்டும் குறையாமல் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனை வாய்ப்பாகக் கருதும் பட்சத்தில் நீண்ட கால முதலீட்டுக் கால அளவீட்டை 3 வருடங்கள் வரையில் உயர்த்தவும் வாய்ப்புகள் உள்ளது.
இதுகுறித்த முடிவுகளை நாளை பார்ப்போம்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications