மோடியின் கார்பரேட் வரியை குறைக்கும் திட்டத்தின் நிலை என்ன? நாளை முக்கிய முடிவு..!

இந்தியாவில் தொழில் மற்றும் உற்பத்தி செய்ய வெளிநாட்டில் இருந்து புதிய நிறுவனங்களைக் ஈர்க்கவும், தற்போது இருக்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஏதுவாக அதிக வர்த்தகம் செய்ய ஊக்குவிக்கும் வகையில் நிறுவனங்களின் வருமானத்தின் மீது விதிக்கப்படும் கார்பரேட் வரியைக் குறைக்கப்பட வேண்டும் எனப் பலமுறை பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

இந்நிலையில் பிப்.1 (நாளை) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் அறிக்கையில் கார்ப்பரேட் வரி குறைப்பதற்கான வாய்ப்புகள் எப்படி உள்ளது..?

பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

வருவாய் இழப்பு

வருவாய் இழப்பு

2018ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் மற்றும் மத்திய அரசால் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளின் மூலம் மத்திய அரசு அதிகளவிலான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் 2018-19ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் தற்போது இருக்கும் 30 சதவீத கார்பரேட் வரியை 25 சதவீதமாகக் குறைப்பதற்கான வாய்ப்புகள் குறைந்துள்ளது.

 

அன்னிய முதலீடு

அன்னிய முதலீடு

ஆனால் இந்தியாவில் புதிய நிறுவனங்களையும், முதலீட்டையும் ஈர்க்க வேண்டும் என்றால் தற்போது அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகள் வர்த்தகச் சந்தைக்கு ஏதுவாகக் கார்பரேட் வரியைக் குறைப்பது போல இந்தியாவும் குறைக்க வேண்டும்.

இல்லையெனில் புதிய வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஈர்ப்பது அடுத்தச் சில வருடங்களுக்கு முடியாத காரியமாகிவிடும்

 

2015இல்..

2015இல்..

2015ஆம் ஆண்டில் மோடி நிறுவனங்களுக்கும், வர்த்தகச் சந்தைக்கும் ஏதுவாகக் கார்ப்பரேட் வரியை அடுத்த 4 வருடத்தில் படிப்படியாகக் குறைக்கப்படும் என அறிவித்தார்.

 அருண் ஜேட்லி

அருண் ஜேட்லி

இதன் அடிப்படையில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி 2016ஆம் நிதியாண்டில் 50 கோடி ரூபாய்க்கும் குறைவாக வருமானத்தைக் கொண்ட நிறுவனங்களுக்குக் கார்பரேட் வரியை 25 சதவீதமாக அறிவித்தார், அதன் பின்பு வளர்ந்து வரும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ஏதுவாகக் குறிப்பிட காலத்திற்கு முழுமையான வரி விலக்கும் அறிவித்தார்.

இதனால் இந்தியாவில் பெரிய அளவிலான மாற்றங்கள் ஏற்படவில்லை, மேலும் சிற நிறுவனங்களின் வளர்ச்சியும் நாட்டின் பொருளாதாரத்தையும் வேலைவாய்ப்பு சந்தையை மேம்படுத்தவும் இல்லை.

 

வாய்ப்புகள்

வாய்ப்புகள்

இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் வெ கார்ப்பரேட் வரியைக் குறைப்பதற்கு அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிகிறது.

நிறுவனங்கள்

நிறுவனங்கள்

கார்பரேட் வரி குறைக்கப்பட்டால் இந்தியாவில் இருக்கும் சிறு மற்றும் பெரிய நிறுவனங்கள் அனைத்துக்கு மிகப்பெரிய ஜாக்பாட் என்றே சொல்லாம். இதனால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகவும் வாய்ப்புகள் உண்டு. நாளை வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

நியூஸ்லெட்டர்

நியூஸ்லெட்டர்

தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்துடன் எப்போதும் இணைந்திருக்கும் வகையில் தொடர்ந்து முதலீட்டுக்கான டிப்ஸ், வர்த்தகச் சந்தை, பொருளாதாரம், வேலைவாய்ப்பு, ஈகாமர்ஸ், மியூச்சுவல் பண்ட் போன்ற அனைத்து விதிமானச் செய்திகளை நியூஸ்லெட்டர் வாயிலாகப் பெறலாம்.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+