2017ஆம் ஆண்டில் பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி அமலாக்கத்தின் காரணமாக இந்தியா வர்த்தகச் சந்தையில் மிகப்பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வேலைவாய்ப்பு சந்தை, அரசின் வரி வருமானம், வர்த்தகப் பற்றாக்குறை, ஏற்றுமதியில் தொய்வு ஆகியவை இந்தியாவை அதிகளவில் பாதித்துள்ளது.

இவை அனைத்தையும் தீர்க்கும் ஒரு கருவியாக 201819ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் பார்க்கப்படுகிறது.
பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
ஏற்கனவே பட்ஜெட் குறித்துப் பல்வேறு கணிப்புகள் இருக்கும் நிலையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் எப்படி இருக்க வேண்டும் என மக்கள் தங்களின் கருத்தைத் தமிழ் குட்ரிட்டன்ஸ் வாக்கெடுப்பின் வாயிலாக அளித்துள்ளனர். இவை உங்களின் பார்வைக்கு.

வருமான வரி விதிப்பு அளவுகள் உயர்த்துவதைச் சாமானியர்கள் அதிகளவில் எதிர்பார்க்கின்றனர். தற்போது இருக்கும் 2.5 லட்சம் ரூபாய் வரியில்லா வருமான அளவை 3 லட்சம் வரையில் உயர்த்த வேண்டும் எனப் பலர் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் மக்களும் இதற்கு அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.



Click it and Unblock the Notifications