அமெரிக்க ரீடெயில் நிறுவனமான வால்மார்ட் இந்தியாவின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட்டின் குறிப்பிட்ட அளவிலான பங்குகளை வாங்குவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது.
அதே நேரம் பிளிப்கார்ட்டுக்குப் போட்டியாக இருக்கும் அமேசான் நிறுவனத்தில் இருந்து 15 சதவீத பங்குகளை வால்மார்ட் வாங்க இருக்கின்றது என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
பேச்சுவார்த்தை
மார்ச் மாதத்திற்கும் இந்தப் பேச்சுவார்த்தை முடிவடையும் என்றும் பிளிப்கார்ட் தளத்தில் பொருட்களை விற்கவும் செய்யும் என்று கூறப்படுகிறது.
மறுப்பு
இதுகுறித்து வால்மார்ட் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ராண்டியை தொடர்புகொண்ட போது வதந்திகள் மற்றும் உகங்களுக்குப் பதில் அளிக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார். பிளிப்கார்ட் நிறுவனமும் இது குறித்துக் கருத்துக்களைப் பகிரவில்லை.
அமேசான்
ஒருவேலை பிளிப்கார்ட்டில் வால்மார்ட் முதலீடு செய்தால் இந்தியாவில் அமேசான் நிறுவனத்திற்கு மிகப் பெரிய பின்னடைவாக இருக்கும்.
மளிகை பொருட்கள்
மறுபக்கம் மளிகை பொருட்கள் விற்பனையில் பிளிகார்ட் இறங்கப் பக்கபலமாகவும் இருக்கும். பிக்பேஸ்கட் போன்ற நிறுவனங்களுக்கு நெறுக்கடியாகவும் இருக்கும்.
எவ்வளவு முதலீடு?
வால்மார்ட் நிறுவனம் 750 மில்லியன் டாலர் முதல் 1 பில்லியன் டாலர் வரை பிளிப்கார்ட்டில் முதலீடு செய்யும் என்று செய்திகள் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications