பெட்ரோல், டீசல் மீதான கலால் வரிக் குறைப்பு.. லிட்டருக்கு 2 ரூபாய் குறையும்..!
பட்ஜெட் அறிக்கையில் Standard Deduction கீழ் 40,000 ரூபாய் வரையில் வரிச் சலுகை கிடைத்துள்ளது. சாமானியர்களுக்கு இது மட்டும் தான் என்று அனைவரும் பேசிக்கொண்டு இருக்கையில் மத்திய அரசு புதிதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கலால் வரி
பட்ஜெட் நாளில் சாமானியர்களுக்குக் கிடைத்த 2வது லட்டு. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி குறைக்கப்படும் எனத் தமிழ் குட்ரிட்டன்ஸ் தனது கணிப்புகளை ஏற்கனவே வெளியிட்டு இருந்த நிலையில், தற்போது கணிப்புகள் உண்மையாகியுள்ளது.
எண்ணெய் வள அமைச்சகம்
நிதியமைச்சகத்திடம் எண்ணெய் வள துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளதன் காரணமாகப் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியைக் கணிசமாகக் குறைக்கப்பட உள்ளதாக நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
2 ரூபாய்
இந்த வரிக் குறைப்பின் மூலம் ஒரு லிட்டருக்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் 2 ரூபாய் வரையில் குறையும் எனத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications