இந்த பட்ஜெட் நடுத்தர மக்களுக்கு உதவும் வகையில் இருக்கும் : இணை நிதி அமைச்சர் பிரதாப் சுக்லா

இன்று காலை 11 மணியளவில் 2018-2019 நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டினை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்ய உள்ள நிலையில் இணை நிதி அமைச்சரான பிராதாப் சுக்லா கூறியுள்ளார். எனவே சாமானியன் இந்தப் பட்ஜெட்டில் என்னவெல்லாம் எதிர்பார்க்கிறான் என்று இங்குப் பார்க்கலாம்.

பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

 வரி சுமையைக் குறைத்தல்

வரி சுமையைக் குறைத்தல்

பணவீக்கம் மற்றும் வேலை வாய்ப்புச் சரிவு போன்றவை அதிகரித்துக் காணப்படுவதால் அருண் ஜேட்லி வரிச் சுமையினைக் குறைப்பாரா என்று அதிகளவில் எதிர்பார்க்கின்றனர். இதனால் நடுத்தர மக்கள் தங்களது தினசரி செலவினங்களை நிர்வகிப்பது, சேமிப்பினை தொடர்வது மற்றும் முதலீடுகளைச் செய்வதில் சிரமமாக உள்ளது.

எனவே அருண் ஜேட்லி வரி அளவீடுகளை மாற்றி அமைப்பது அல்லது தற்போது உள்ள வரிகளைக் குறைப்பது போன்ற அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கலாம்.

 

வருமான வரி விலக்கு

வருமான வரி விலக்கு

மத்திய அரசு ஊழியர்களுக்கு 7வது சம்பள கமிஷன் கீழ் சம்பள உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த முறை வருமான வரி விலக்கு வரம்பானது 2.5 லட்சம் ரூபாயில் இருந்து 3 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.

இதற்கு முன்பு 1990-1991 நிதி ஆண்டில் 22,000 ரூபாயாக இருந்த வருமான வரி விலக்கு வரம்பை ஒவ்வொரு ஆண்டுத் தொடர்ந்து உயர்த்தி 2014-2015 நிதி ஆண்டில் 2.5 லட்சம் ரூபாயாக நிர்ணைத்து இருந்தனர். அதற்குப் பிறகு இதில் எந்த மாற்றமும் ஏற்படுத்தவில்லை என்பதால் வரி விலக்கு வரம்பை உயர்த்தினால் நடுத்தர மக்களுக்கு மிகப் பெரிய நண்மையாக இருக்கும்.

 

பிரிவு 80சி வரம்பை உயர்த்த வாய்ப்பு

பிரிவு 80சி வரம்பை உயர்த்த வாய்ப்பு

வருமான வரி சட்டப் பிரிவு 80சி-ன் கீழ் 1.5 லட்சம் ரூபாய் வரை வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இதன் கீழ் ஒருவர் விலக்கு பெற குழந்தைகளின் பள்ளி படிப்புச் செலவு, மருத்துவச் செலவு, சிறு சேமிப்புத் திட்டங்கள் போன்றவற்றைக் காண்பிக்க முடியும். தற்போது இந்த வரம்பை 2 லட்சம் முதல் 2.5 லட்சம் வரை உயர்த்த வாய்ப்புகள் உள்ளது. இப்படிச் செய்யும் போது 10 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் அதிகளவில் பயன் அடைவார்கள்.

வீட்டுக் கடன்

வீட்டுக் கடன்

வீட்டுக் கடனிற்கான வட்டியில் ஆண்டுக்கு 1.5 லட்சம் ரூபாய் வரை பிரிவு 80சி கீழ் விலக்கு அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது வீடுகளின் விலை அதிகளவில் உயர்ந்துள்ளதால் கடனின் முதன்மை தொகையிலும் வரி விலக்கு வேண்டும் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது/

 மருத்துவச் செலவினக் கொடுப்பனவு

மருத்துவச் செலவினக் கொடுப்பனவு

தற்போது மருத்துவச் செலவினக் கொடுப்பனவு போன்றவற்றுக்கு 15,000 ரூபாய் வரை மட்டுமே வரி விலக்கு உள்ளது. மாறி வரும் உலகில் தற்போது மருத்துவச் செலவுகள் பல மடங்கு உயர்ந்துள்ளதால் இதனை 30,000 ரூபாயாக உயர்த்த வாய்ப்புகள் உண்டு.

பட்ஜெட் லைவ்

மத்திய பட்ஜெட் லைவ்

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+