பட்ஜெட் 2018: மருத்துவ துறைக்கு கிடைத்த சலுகைகள்!
டெல்லி: நாம் எதிர்பார்த்தது போன்றே பட்ஜெட் அறிவிப்பில் மருத்துவக் காப்பீடு திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்தது மட்டும் இல்லாமல் புதிதாக மருத்துவக் கல்லூரிகள் போன்றவற்றையும் அறிவித்துள்ளார். கிராமபுற சுகாதாரத்துக்கு ரூ16,713 கோடி.
பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
மருத்துவக் கல்லூரிகள்
நாடு முழுவதும் 24 அரசு மருத்துவக் கல்லூரிகள் புதியதாக உருவாக்கப்படும் என்று அறிவித்துள்ளார். நாடு முழுவதும் 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 1 மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும்.
காசநோயாளிகள்
டிபி எனப்படும் காச நோய்களால் அவதிப்பட்டு வருபவர்களுக்கு ரூ. 500 கோடி மருத்துவப் பரிசோதனைகளுக்காக வழங்கப்படும்.
இலவச மருத்துவம்
ஏற்கனவே நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகள் மூலமாக இலவச மருத்துவம் அளித்து வரும் நிலையில் அதற்காக 1,200 கோடி ரூபாய்க் கூடுதலாக ஒதுக்கப்படுகிறது. அனைவருக்கும் மருத்துவ நல உதவிகளை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும். 10 கோடி குடும்பங்களுக்கு ரூ5 லட்சம் வரையிலான சிகிச்சையை அரசு ஏற்கும்.
மருத்துவக் காப்பீடு
உலகின் மிகப் பெரிய மருத்துவக் காப்பீடு திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். விஜய் ரஜிடர்களே மீஸ் போட்டுக்கொள்ளுங்கள். 50 கோடி குடும்பங்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவக் காப்பீடு திட்டங்கள் வழங்கப்படும்.
மருத்துவமனைகள்
நாடு முழுவதும் புதிதாக 5 லட்சம் மருத்துவ மையங்கள் அமைக்கப்படும்.
நியூஸ்லெட்டர்
தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்துடன் எப்போதும் இணைந்திருக்கும் வகையில் தொடர்ந்து முதலீட்டுக்கான டிப்ஸ், வர்த்தகச் சந்தை, பொருளாதாரம், வேலைவாய்ப்பு, ஈகாமர்ஸ், மியூச்சுவல் பண்ட் போன்ற அனைத்து விதிமானச் செய்திகளை நியூஸ்லெட்டர் வாயிலாகப் பெறலாம்.


Click it and Unblock the Notifications