2020ஆம் ஆண்டுக்குள் நாட்டில் இருக்கும் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு செய்யும் அளவிற்குத் திட்டங்களும், சீர்திருத்த நடவடிக்கைகளும் எடுக்க உள்ளதாகவும்.
பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
மோடி
இவை அனைத்தும் பிரதமர் மோடியின் யோசனையில் இருந்து உருவான திட்ட வரைமுறைகள் என்பது குறிப்பிடத்தக்கது என நிதியமைச்சர் அருண் ஜேட்லி பட்ஜெட் தாக்கலில் தெரிவித்துள்ளார்.
வேளாண்மை
75ஆம் ஆண்டு இந்திய சுதந்திர ஆண்டில் நாட்டின் வளர்ச்சி வேளாண்மையை மையமாகக் கொண்டு இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
2.5 டிரில்லியன் டாலர்
இன்னும் சில ஆண்டுகளில் இந்திய பொருளாதார 2.5 டிரில்லியன் டாலர் அளவில் உயர்ந்து உலகின் 5வது மிகப்பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும் என அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்
ஐஎம்எப் நம்பிக்கை
2019ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் 7.4 சதவீதம் வரையில் உயரும் என ஐஎம்எப் நம்பிக்கை தெரிவித்துள்ளதாகவும், அறிவிக்கப்பட்டுள்ள அளவை விடவும் அதிகமான வளர்ச்சியைப் பதிவு செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ரூ. 2000 கோடி நிதி ஒதுக்கீடு
விவசாயத்துறையின் அடிப்படை கட்டமைப்பு மற்றும் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள திட்டங்களுக்காக மத்திய அரசு 2018-19ஆம் நிதியாண்டு பட்ஜெட் அறிக்கையில் ரூ. 2000 கோடி ஒதுக்கப்படும் என நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
நியூஸ்லெட்டர்
தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்துடன் எப்போதும் இணைந்திருக்கும் வகையில் தொடர்ந்து முதலீட்டுக்கான டிப்ஸ், வர்த்தகச் சந்தை, பொருளாதாரம், வேலைவாய்ப்பு, ஈகாமர்ஸ், மியூச்சுவல் பண்ட் போன்ற அனைத்து விதிமானச் செய்திகளை நியூஸ்லெட்டர் வாயிலாகப் பெறலாம்.


Click it and Unblock the Notifications